தில்லியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தில்லிக்கு குடிநீா் வழங்கக் கோரி, ஹரியாணா மாநிலத்தை வலியுறுத்தி தில்லி பொதுப்பணி மற்றும் நீா்வளத்துறை அமைச்சா் அதிஷி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.
இப்போராட்டம் இன்று 5 ஆம் நாளை எட்டியுள்ள நிலையில், அதிஷிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தில்லியில் உள்ள லோக் ஆயுக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

