CRY நிறுவனத்தின் “அனைவருக்கும் முழுமையான கல்வியே நாட்டின் நலன்” பிரச்சாரத்தின் நோக்கங்கள் குறித்து ஜான் ராபர்ட்ஸ் விரிவாக எடுத்துக் கூறினார் : “எங்கள் திட்ட செயல்பாட்டுப் பகுதிகளில், ஆரம்பக் கல்வி , மேல்நிலை தொடக்க கல்வி , இடைநிலை கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி வகுப்புக்களில் அதிகளவிலான பெண் குழந்தைகள் சேர்க்கப்படுவதையும் தக்கவைத்துக் கொள்ளப்படுவதையும் உறுதி செய்ய CRY மற்றும் அதன் திட்டங்கள் செயல்படுத்தும் நிறுவனங்கள், தீவிரமாக செயல்படுவார்கள். குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்கள், கல்வியாளர்கள், சமூக உறுப்பினர்கள், செல்வாக்கு செலுத்துபவர்கள், மாநில அரசு அதிகாரிகள், பல்வேறு கல்வியில் நிலைகளில் உள்ள மாணவர்கள், ஊடக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து சமூகத்தினரிடையே பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதை எங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்றார்.

&w=1200&resize=1200,675&ssl=1)