மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக் கோப்பை தொடரில், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
பார்படோஸில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசியது. அமெரிக்க அணியின் நிதிஷ் குமார் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்த நிலையில், அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது.
குறிப்பாக 19 ஆவது ஓவரை வீசிய இங்கிலாந்தின் கிறிஸ் ஜோர்டன், ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இது நடப்பு உலகக் கோப்பையில் மூன்றாவது ஹாட்ரிக்காக அமைந்தது, ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் இருமுறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அணி 18.5 ஓவர்களில் 115 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், இங்கிலாந்து தொடக்க வீரர்கள் அதை 9.4 ஓவர்களிலேயே எட்டினர். கேப்டன்ஜாஸ் பட்லர் 38 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். குறிப்பாக ஹம்சித் வீசிய ஓவரில் 5 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார்.
10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து குரூப்-2-லிருந்து முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.
இதேபோன்று, டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில், மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தென்னாப்ரிக்க அணி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இதையும் படிங்க – இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி மழையால் ரத்தானால் அடுத்து என்ன நடக்கும் தெரியுமா?
ஆண்டிகுவா மற்றும் பார்படோஸில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா பந்துவீசியது. முதலில் ஆடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. 136 ரன்கள் இலக்கை நோக்கி தென்னாப்ரிக்கா ஆடியபோது மழை குறுக்கிட்டதால் போட்டி 17 ஓவர்களாகவும், இலக்கு 123ரன்களாகவும் குறைக்கப்பட்டது.
16புள்ளி 1 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு தென்னாப்ரிக்கா 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குரூப் 2-ல் 6 புள்ளிகள் பெற்றுள்ள தென்னாப்ரிக்கா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது
.
&w=750&resize=750,375&ssl=1)
