மாஸ்கோ:
ரஷ்யாவின் வடகோகசஸ் பகுதியான டஜிஸ்தானில் யூத வழிபாட்டுத் தலம், தேவாலயம், காவல் நிலையம் ஆகிய இடங்களில் துப்பாக்கிக்காரர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, பாதிரியார் ஒருவரும் குறைந்தது 15 காவல்துறை அதிகாரிகளும் மாண்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

டஜிஸ்தான் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களில் ஒரே நேரத்தில் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் ஜூன் 23ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
“இது டஜிஸ்தானுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ரஷ்யாவுக்கே சோகம் நிறைந்த நாளாகும்,” என்று டெலிகாரம் செயலி மூலம் டஜிஸ்தானின் ஆளுநரான செர்கே மெலிக்கோவ் ஜூன் 24ஆம் தேதியன்று பதிவிட்டார்.

இந்தத் தாக்குதல்களுக்கு யாரும் இன்னும் பொறுப்பேற்கவில்லை.
தாக்குதல்காரர்களில் ஆறு பேரை அதிகாரிகள் சுட்டுக்கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post ரஷ்யாவில் துப்பாக்கிச்சூடு: பாதிரியார், 15 காவல்துறை அதிகாரிகள் உயிரிழப்பு appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

