• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

அரையிறுதிக்கு இங்கிலாந்து தகுதி: வெளியேறிய அமெரிக்கா | T20 WC | england qualified to semifinals usa exits t20 world cup

GenevaTimes by GenevaTimes
June 23, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
அரையிறுதிக்கு இங்கிலாந்து தகுதி: வெளியேறிய அமெரிக்கா | T20 WC | england qualified to semifinals usa exits t20 world cup
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பார்படாஸ்: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்துக்கு இங்கிலாந்து அணி முன்னேறியுள்ளது. ‘சூப்பர் 8’ குரூப் 2 போட்டியில் அமெரிக்காவை 10 விக்கெட்டுகளில் வீழ்த்தியது இங்கிலாந்து.

மேற்கு இந்தியத் தீவுகளின் பார்படாஸில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசியது. அமெரிக்கா 18.5 ஓவர்களில் 115 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணி சார்பில் நிதிஷ் குமார் 30, கோரி ஆண்டர்சன் 29, ஹர்மீத் சிங் 21 ரன்கள் எடுத்தனர்.

இங்கிலாந்து சார்பில் அதில் ரஷித் 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஒரே ஓவரில் ஹாட்ரிக் உட்பட 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் கிறிஸ் ஜார்டன். சாம் கரன் 2, லிவிங்ஸ்டன் மற்றும் ரீஸ் டாப்ளி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது. கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் சால்ட் இணைந்து ஆட்டத்தை தொடங்கினர். பட்லர் இதில் அதிரடியாக ஆடி அசத்தினார். 38 பந்துகளில் 83 ரன்களை அவர் குவித்தார். 6 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். இதில் ஹர்மீத் வீசிய ஒரு ஓவரில் 5 சிக்ஸர்களை பட்லர் பறக்க விட்டார். 21 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார் சால்ட். 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் எடுத்து அசத்தியது இங்கிலாந்து. ஆட்ட நாயகன் விருதை அதில் ரஷித் வென்றார்.

‘சூப்பர் 8’ குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. இந்த சூழலில் 3 ஆட்டங்களில் 2 வெற்றிகளுடன் இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. நாளை (ஜூன் 24) காலை நடைபெறும் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் விளையாடுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.



Read More

Previous Post

Tamil Fishermen Arrested: நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 22 பேரை கைதுசெய்து இலங்கை கடற்படை அட்டூழியம்!-22 tamil nadu fishermen who were fishing near neduntheevu were arrested and sri lankan navy atrocity

Next Post

டீசல் மானிய விண்ணப்பங்களுக்கு உடனடி அனுமதி | Makkal Osai

Next Post
டீசல் மானிய விண்ணப்பங்களுக்கு உடனடி அனுமதி | Makkal Osai

டீசல் மானிய விண்ணப்பங்களுக்கு உடனடி அனுமதி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin