• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்ட பலன்களை பெற விண்ணப்பிப்பது எப்படி?

GenevaTimes by GenevaTimes
June 23, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்ட பலன்களை பெற விண்ணப்பிப்பது எப்படி?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கூடுதலாக கட்டப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு வீட்டு வசதியை வழங்க வேண்டும் என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே குடியிருக்க இடம் இல்லாத ஏழை மக்களுக்கு வீட்டு வசதியை வழங்குவதே ஆகும்.

விளம்பரம்

இந்த திட்டத்தின் மூலம், கடந்த 10 ஆண்டுகளில் ஏழைக் குடும்பங்களுக்கு மொத்தம் 4.21 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு இன்னும் நிரந்தர வீடு இல்லையென்றால், தகுதியுள்ள பொதுமக்கள் அனைவரும் PMAY திட்டத்தில் வீடு கட்டித்தர விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு முன்பு, பிரதான் மந்திரி யோஜனா திட்டத்தின் தகுதிகள் மற்றும் பலன்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் (PMAY-G) மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புறம் (PMAY-U) ஆகிய இரண்டு வகையான வீடுகள் கட்டித்தரப்படுகின்றன. கிராம மற்றும் நகர்ப்புறங்களில் தற்காலிக வீடுகளில் வசிக்கும் மக்கள், தங்களிடம் சொந்த நிலம் இருக்கும் பட்சத்தில் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும், வாடகை வீடுகளில் வசிக்கும் மக்கள் நிரந்தரமான வீடுகளைப் பெறவும் இத்திட்டம் உதவுகிறது.

விளம்பரம்

வீடு கட்டுவதற்காக இத்திட்டத்தின் கீழ், வீட்டுக் கடனுக்கு அரசு மானியம் வழங்குகிறது. மானியத்தின் தொகையானது வீட்டின் அளவு மற்றும் வருமான அளவைப் பொறுத்து இருக்கும். மேலும், இத்திட்டத்தின் கீழ் வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களையும் வழங்குகின்றன. வீட்டுக் கடன்களை திருப்பி செலுத்த அதிகபட்ச காலம் 20 ஆண்டுகள் ஆகும்.

இதையும் படிக்க:
யூஏஎன் (UAN) அக்கவுண்ட் எதற்கு தெரியுமா..? சந்தேகங்களும் அதற்கான விளக்கங்களும்!

தகுதி:

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பலன்களை பெற விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாகவும், குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும், உங்கள் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.18 லட்சத்திற்கு மேல் இருந்தால் இந்தத் திட்டத்திற்கு நீங்கள் தகுதி பெறமுடியாது.

விளம்பரம்

மற்றொரு முக்கியமான தகுதி என்னவென்றால் விண்ணப்பதாரர் பெயரில் இதற்கு முன்பு எந்த ஒரு வீடும் இருக்கக்கூடாது. அதேபோல அவரது குடும்பத்தில் இருக்கும் யாரும் அரசுப் பணியில் இருக்கக்கூடாது. மேலும் விண்ணப்பதாரரின் அடையாள அட்டை, முகவரி சான்று, வருமான சான்று மற்றும் சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

இதையும் படிக்க:
விவசாயிகளுக்கு விரைவில் ஹேப்பி நியூஸ்… மத்திய அரசு எடுக்கப் போகும் அதிரடி நடவடிக்கை!

எப்படி விண்ணப்பிப்பது?

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவிற்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் நீங்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது, ஆன்லைனில் PMAY – https://pmaymis.gov.in/

விளம்பரம்
  • https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

  • ஹோம் பேஜில், PM Awas Yojana என்பதைக் கிளிக் செய்யவும்.

  • உங்கள் அனைத்து தகவல்களையும் ஒன்றுவிடாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.

  • தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.

  • பிறகு சரிபார்த்துக் கொண்டு சமர்ப்பிக்கவும்

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு ஆஃப்லைனில் விண்ணப்பிக்க, நீங்கள் அருகிலுள்ள பொது சேவை மையத்திற்கு (CSC) செல்லலாம்.

.

Read More

Previous Post

அடுத்த மெஸ்ஸியாக வலம் வரும் 16 வயது சிறுவன்… உலகம் உற்றுநோக்கும் இளம் கால்பந்து வீரர்!

Next Post

கல்வித் தகுதிகள் வேட்பாளர்களுக்கு முக்கியமான சொத்து – பஹ்மி

Next Post
கல்வித் தகுதிகள் வேட்பாளர்களுக்கு முக்கியமான சொத்து – பஹ்மி

கல்வித் தகுதிகள் வேட்பாளர்களுக்கு முக்கியமான சொத்து – பஹ்மி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin