உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி ரன்கள் குவிக்க திணறி வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
பல முக்கியமான ஆட்டங்களில் இந்திய அணிக்காக சிறப்பாக பேட்டிங் செய்து, விராட் கோலி வெற்றியை தேடித் தந்துள்ளார். நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வெற்றியில் விராட் கோலி முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லீக் சுற்றில் 3 இன்னிங்ஸ்களில் மொத்தமே அவர் 5 ரன்கள் எடுத்தார்.
சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 24 பந்துகளில் 24 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனால் கோலியை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் அதிகரித்தன. இந்நிலையில் விராட் கோலியின் பர்ஃபார்மென்ஸ் குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியதாவது-
விராட் கோலியின் ஆட்டம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. அவர் அதிக ரன்கள் எடுப்பதை நான் விரும்புகிறேன். இதில் இன்னொரு நல்ல விஷயமும் இருக்கிறது.
இதையும் படிங்க – விராட் கோலியின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ் – என்ன சாதனை தெரியுமா?
கோலி குறைவான ஸ்கோர் எடுக்கும் போது மற்ற பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு கிடைக்கின்றன. அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி இந்த தொடரில் ரன்களை சேர்த்துள்ளனர். குறிப்பாக மிடில் ஆர்டரில் பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுத்துள்ளார்கள். என்று தெரிவித்தார்.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான முக்கியமான ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்திய அணி இன்று எதிர்கொள்கிறது. வரும் திங்களன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
