ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஜூலை 1 முதல் சில குறிப்பிட்ட செயலிகள் மூலம் பில் செலுத்த முடியாது.
எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் உள்ளிட்ட முன்னணி வங்கிகள், நாடு முழுவதும் 10 கோடிக்கும் அதிகமான கிரெடிட் கார்டுகளை விநியோகம் செய்துள்ளன. இந்நிலையில், ஜூன் 30ஆம் தேதிக்கு பிறகு அனைத்து கிரெடிட் கார்டு பேமெண்டுகளும் பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் அதாவது பிபிபிஎஸ் மூலம் செயல்படுத்தப்பட வேண்டு என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் உள்ளிட்ட நாட்டின் முன்னணி வங்கிகள், பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் விதிகளை இன்னும் பின்பற்றவில்லை. அதே நேரத்தில், PhonePe, Cred, BillDesk, Infibeam Avenues ஆகிய நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியின் விதிமுறையை பின்பற்றியுள்ளன. இதனால், இந்த நிறுவனங்களின் ஆப்களில் இருந்து, ரிசர்வ் வங்கியின் விதிகளை பின்பற்றாத வங்கிகளின் கிரெடிட் கார்டுகளுக்கு கட்டணத்தை செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஜூன் 30ஆம் தேதிக்குள் நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடந்து இயங்குவதற்கு, விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட 34 கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகளில் தற்போது வரை வெறும் 8 வங்கிகள் மட்டுமே பாரத் பில் பேமெண்ட் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளன.
Also Read |
பெண் பிள்ளைகளின் எதிர்காலம் காக்கும் செல்வமகள் சேமிப்பு திட்டம்! வட்டி விவரம் இங்கே!
குறிப்பாக, எஸ்பிஐ, கோடக் மகிந்திரா, ஃபெடரல் வங்கி, இண்டஸ்இண்ட், பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் மட்டுமே பிபிபிஎஸ் முறையை பின்பற்றி வருகின்றன. மோசடி பரிவர்த்தனைகளை கண்டுபிடிக்கவும், தடுத்து நிறுத்தவும் கிரெடிட் கார்டு பில் கட்டணத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆர்பிஐ முடிவு செய்துள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
