அம்பாறை தீகவாபி ரஜமஹா விகாரையின் பொசன் வலயம் பொசன் பௌர்ணமி தினமான நேற்று (21) ஆரம்பமானது.
அதன் இரண்டாம் நாளான இன்று (22) தீகவாபி விகாரையில் பொசன் அன்னதான நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை முஸ்லிம் வர்த்தகரும் பொத்துவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம அமைப்பாளருமான லொயிட்ஸ் ஆதம் லெப்பை அனுசரணை வழங்கியுள்ளமை இங்கு விசேட அம்சமாகும்.
இந்த நிகழ்வை அவர் மூன்றாவது முறையாக தனது சொந்த செலவில் பக்தர்களுக்கு வழங்கி வைக்கிறார்.
இது தொடர்பில் தீகவாபி ரஜமஹா விகாரையின் வணக்கத்திற்குரிய மஹாஓயா சோபித தேரர் பக்தர்கள் சார்பில் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
முதலாம் நாளான நேற்று (21) இடம்பெற்ற சமய நிகழ்விலும் ஆதம் லெப்பை கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
The post அம்பாறை தீகவாபி பொசன் அன்னதானம் வழங்கும் லொயிட்ஸ் ஆதம் லெப்பை appeared first on Thinakaran.


