கோலாலம்பூர்:
சுங்கை பாக்காப் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏதேனும் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் நடந்தால், அதுகுறித்து பொதுமக்கள் தகவல் மற்றும் புகார்களை பதிவு செய்ய
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) இரண்டு செயல்பாட்டு அறைகளை திறந்துள்ளது.
பினாங்கு MACC தலைமையகம் மற்றும் MACC செபெராங் பிறை கிளையின் அலுவலகத்தில் செயல்பாட்டு அறைகள் இருப்பதாக MACC இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அறிவித்துள்ளது.


