பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் திருமணம் செய்து கொண்டதாக வெளியான புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். முகமது ஷமி மீது அவரது மனைவி பல்வேறு புகார்களை கூறியதோடு, வழக்குகளும் தொடர்ந்துள்ளார். ஆனால், அனைத்தும் ஆதாரமற்றவை என்றும், தனது மனைவி தன்னை மிரட்டி வருவதாகவும் கூறிய முகமது ஷமி, கடந்த ஆண்டு தொடக்கத்தில் கடும் மன உளைச்சலில் இருந்தார். பின்னர் சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர், கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றவர்களில் மிகவும் முக்கியமாக இருந்தார்.
50 ஓவர் உலகக் கோப்பை 2023 தொடரில் 24 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆனால், காயம் காரணமாக அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட அவர், கடந்த ஐபிஎல் தொடரிலும், தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரிலும் பங்கேற்க முடியவில்லை.
அதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சானியா மிர்சா, தனது கணவர் சோயப் மாலிக்கை விவாகரத்து செய்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் ஏற்கெனவே ஆயிஷா சித்திக் என்பவரை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்த நிலையில், அவரை கடந்த 2010ஆம் ஆண்டு சானியா மிர்சா காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கடந்த ஜனவரியில் சனா ஜாவேத் என்ற பாகிஸ்தான் நடிகையை சோயப் மாலிக் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, அவரை சானியா மிர்சா விவாகரத்து செய்தார்.
இதையும் படிக்க:
ஒரே பந்தில் ஹிட் விக்கெட், ரன் அவுட் – ஆனாலும் அவுட் ஆகாத பாகிஸ்தான் வீரர்! காரணம் என்ன தெரியுமா?
இதையடுத்து, சானியா மிர்சாவும், முகமது ஷமியும் திருமணம் செய்து கொண்டதாக சில புகைப்படங்கள் கடந்த ஜனவரி மாதத்தில் சமூகவலைதளங்களில் வெளியாகின. ஆனால் அது பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. இந்நிலையில், கடந்த ஜூன் 12ஆம் தேதி மீண்டும் சானியா மிர்சா – முகமது ஷமி இருவரும் திருமணக் கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின. இதனால், இருவரும் திருமணம் செய்து கொண்டதாக பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆனால், அந்த புகைப்படங்கள் அனைத்தும் போலி என்பது தெரியவந்தது. அதாவது, சோயப் மாலிக்கை, சானியா மிர்சா திருமணம் செய்தபோது எடுத்த புகைப்படங்களில், சோயப் மாலிக் முகத்திற்கு பதிலாக, முகமது ஷமியின் முகத்தை பொருத்தி, மார்ஃபிங் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து பேசியுள்ள சானியா மிர்சாவின் தந்தை, “இந்த வதந்திகள் மிகவும் முட்டாள்தனமானவை. சானியா மிர்சா இதுவரை முகமது ஷமியை நேரில் பார்த்ததே இல்லை” என்று கூறி இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதையும் படிக்க:
உலகக்கோப்பை டி20-க்கு பின்னர் இந்திய அணி விளையாடும் போட்டிகள்… அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
தற்போது சானியா மிர்சா மெக்காவுக்கு புனித யாத்திரை சென்றுள்ளார். அவரது கணவரை பிரிந்த நிலையில், தனது மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். முகமது ஷமி இந்திய அணியில் மீண்டும் இடம்பெறும் முயற்சியில் தனது காயத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார். அவர் அடுத்து வரும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக, உடல் தகுதியை தயார் செய்து வரும் நிலையில், இதுபோன்ற வதந்திகள் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)