ஒரே பந்தில் ஹிட் விக்கெட் ஆகி, பின்னர் ரன் அவுட் ஆன பாகிஸ்தான் வீரர் ஷான் மசூத், நாட் அவுட் என்று நடுவர்கள் அறிவித்தது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவதைப் போல, இங்கிலாந்தில் வைட்டலிட்டி டி20 பிளாஸ்ட் என்ற பெயரில் டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்த தொடரில் மொத்தம் 18 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அதில் உள்நாட்டு வீரர்களுடன் பல்வேறு வெளிநாட்டு வீரர்களும் விளையாடி வருகின்றனர். அந்த வகையில், யார்க்ஷையர் அணிக்காக, பாகிஸ்தான் வீரர் ஷான் மசூத் விளையாடி வருவதோடு, அந்த அணியின் கேப்டனாகவும் இருக்கிறார்.
இந்நிலையில், நேற்று லங்காஷையர் அணிக்கு எதிரான போட்டியின்போது, டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார் ஷான் மசூத். தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் களமிறங்கினாலும் ஜோ ரூட்டுடன் இணைந்த ஷான் மசூத் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார். 15வது ஓவரின்போது, லங்காஷையர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாக் பிளாதர்விக் வீசிய பந்தில், வழக்கத்திற்கு மாறான ஷாட் ஆட முயற்சித்த ஷான் மசூத், ஸ்டம்பை மிதித்து ஹிட் விக்கெட் ஆனார். ஆனால், அந்த பந்து நோ-பால் ஆன நிலையில், எதிர்முனையில் நின்றிருந்த ஜோ ரூட் பேட்டிங் முனைக்கு வந்து சேர்ந்தார். இதை எதிர்பாராத ஷான் மசூத், மறுமுனைக்கு ஓடுவதற்குள் ரன் அவுட் செய்யப்பட்டார்.
இதையும் படிக்க:
உலகக்கோப்பை டி20-க்கு பின்னர் இந்திய அணி விளையாடும் போட்டிகள்… அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
ஆனால், ஷான் மசூத்திற்கு அவுட் வழங்கப்படவில்லை. ஏனெனில், மெர்ல்போர்ன் கிரிக்கெட் கிளப்பின் 31.7 விதியின்படி, பேட்ஸ்மேன் தவறாக புரிந்து கொண்டு, கிரீஸில் இருந்து வெளியேறினால், அவரது ரன் அவுட்டை நிராகரிக்கலாம். அதேபோல், அந்த பந்தை டெட் பாலாக நடுவர்கள் அறிவிக்கலாம். அதன்படி, ஹிட் விக்கெட் மற்றும் ரன் அவுட் ஆனாலும், ஷான் மசூத்துக்கு அவுட் வழங்கப்படவில்லை. இது ரசிகர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
Shan Masood was run out at the other end, but given not out due to law 31.7 of batter leaving the wicket under a misapprehension of being out. pic.twitter.com/CWF5xwl9YI
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 21, 2024
இதன்பின்னர் களத்தில் நின்ற ஷான் மசூத், 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, களமிறங்கிய லங்காஷையர் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஆட்ட நாயகனாக ஷான் மசூத் தேர்வு செய்யப்பட்டார். அந்த வகையில், நேற்றைய நாள் ஷான் மசூத்துக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாள் என்றுதான் கூறவேண்டும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
