• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சூப்பர் 8 சுற்றில் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது தென்னாபிரிக்கா அணி

GenevaTimes by GenevaTimes
June 21, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
சூப்பர் 8 சுற்றில் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது தென்னாபிரிக்கா அணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


75

2024 T20 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியொன்று இன்று (21) இடம்பெற்றது.

போட்டியில் தென்னாபிரிக்கா அணி இங்கிலாந்து அணிக்கு 164 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தென்னாபிரிக்கா அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றது. அவ்வணி சார்பில் குயின்டன் டி காக் 65 ஓட்டங்களையும், டேவிட் மில்லர் 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்து வீச்சில் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இரு அணிகளும் தங்களின் முதல் சூப்பர் 8 போட்டியில் வென்றிருந்த நிலையில், இரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்த நிலையில் டி காக் – ஹென்ரிக்ஸ் கூட்டணி அதிரடியாக தொடங்கியது. மொயின் அலி வீசிய 2ஆவது ஓவரிலேயே டி காக் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியை விளாசி அசத்தினார்.

தொடர்ந்து ஆர்ச்சர் வீசிய 4ஆவது ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 21 ஓட்டங்களை டி காக் விளாசினார். இதன் காரணமாக தென்னாபிரிக்கா அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் 63 ஓட்டங்களை குவித்தது. ஒரு பக்கம் டி காக் அனைத்து பவுலர்களையும் பொளந்து கட்டிய போது, மற்றொரு தொடக்க வீரரான ஹென்ரிக்ஸ் பவுண்டரி கூட அடிக்க முடியாமல் தடுமாறி வந்தார். இருப்பினும் சிறப்பாக ஆடிய டி காக் 22 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்த, ஹென்ரிக்ஸ் 25 பந்துகளில் 19 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

இதனால் தென்னாபிரிக்கா அணி 10 ஓவர்களில் 87 ஓட்டங்கள் சேர்த்திருந்தது. இதன்பின் இங்கிலாந்து அணியின் விழித்துக் கொண்டது. ஸ்லோயர் பந்துகளை சிறப்பாக பயன்படுத்தி டி காக்கை 65 ஓட்டங்களில் வீழ்த்த, தேவையே இல்லாமல் அதிரடி வீரர் கிளாசன் 13 பந்துகளில் 8 ஓட்டங்கள் எடுத்த போது ரன் அவுட்டாகி வெளியேறினார். கேப்டன் மார்க்ரமும் 1 ஓட்டத்தில் ஆட்டமிழக்க, 15 ஓவர்களில் தென்னாபிரிக்கா அணியின் ஸ்கோர் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ஓட்டங்களாக இருந்தது.

இதன்பின் டேவிட் மில்லர் – ஸ்டப்ஸ் கூட்டணி இணைந்தது. அடுத்த 3 ஓவர்களில் மில்லர் அதிரடியாக ஓட்டங்களை குவிக்க, ஸ்டப்ஸ் சரியாக டைமிங் செய்ய முடியாமல் திணறினார். பின்னர் 19ஆவது ஓவரை வீச சாம் கரண் வந்தார். இதில் ஒரு சிக்ஸ் உட்பட 14 ஓட்டங்கள் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து கடைசி ஓவரின் முதல் பந்திலேயே மில்லர் 43 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேற, 2ஆவது பந்தில் யான்சன் டக் அவுட்டாகினார். இறுதியாக தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிர்கு 163 ஓட்டங்களை சேர்த்தது.

164 என்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இதனால் தென்னாபிரிக்க அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.



Read More

Previous Post

சுங்கை பாக்காப் இடைத்தேர்தல்: நாளை வேட்பு மனு தாக்கல் | Makkal Osai

Next Post

Kallakurichi : 'கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மோசமான அரசியலை கையில் எடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி' மா. சுப்பிரமணியன்

Next Post
Kallakurichi : 'கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மோசமான அரசியலை கையில் எடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி' மா. சுப்பிரமணியன்

Kallakurichi : 'கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மோசமான அரசியலை கையில் எடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி' மா. சுப்பிரமணியன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin