கோலாலம்பூர்:
மக்கள் ஓசை நாளிதழின் இயக்குநர் டத்தோ கோபியை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தேசியப் பொறுப்பாளர்கள் இன்று மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசினர்.

தலைநகரில் உள்ள மக்கள் ஓசை தலைமையகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புதிய தலைவர் மோகனன் பெருமாள், சங்கத்தின் அயலகப் பிரிவுத் தலைவர் பெ. இராஜேந்திரன், துணைப் பொருளாளர் மு. காசிவேலு, சங்கத்தின் முன்னாள் தலைவர் ஞானசைமன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மோகனன் பெருமாளும் இராஜேந்திரனும் இந்தச் சந்திப்பின்போது டத்தோ கோபிக்கு சால்வையும் மலர்மாலையும் அணிவித்து சிறப்புச் செய்தனர்.
– படம்: தி. மோகன்
The post மக்கள் ஓசை இயக்குநர் டத்தோ கோபியுடன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தேசியப் பொறுப்பாளர்கள் சந்திப்பு appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

