ஆந்திரபிரதேச மாநிலத்தில் உள்ள விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஜூபள்ளி ராமேஷ்வர் ராவ். இவருடைய சிறுவயதில் பல இன்னல்களையும், வறுமையையும் சந்தித்துள்ளார். குறிப்பாக இவரது தந்தையால் சைக்கிள் வாங்க கூட பணம் இல்லாத காரணத்தினால் பல கிலோமீட்டர்கள் நடந்தே பள்ளிக்குச் சென்றுவந்தார் ராவ்.
இவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரேவொரு சம்பவம் அவருடைய ஒட்டுமொத்த விதியையும் மாற்றி எழுதிவிட்டது. இதன் பின்னால் உள்ள சுவாரஸ்யமான கதையை தெரிந்துகொள்வோமா? இன்று ராமேஷ்வர் ராவ் ஹைதராபாத்தின் பிரபலமான குடியிருப்பு மற்றும் வர்த்தக கட்டுமான நிறுவனமான My Home Constructions உரிமையாளராக இருக்கிறார். சிமெண்ட் முதல் கல்வி வரை என இவரது தொழில் ஆர்வம் பல துறைகளிலும் உள்ளது. ஃபோர்பஸ் பத்திரிக்கையின் படி இவருடைய சொத்து மதிப்பு ரூ.18,330 கோடியாகும்.
மிகவும் சிரமப்பட்டு பள்ளிப்படிப்பை நிறைவு செய்த ராமேஷ்வர் ராவ், மேற்படிப்பிற்காக ஹைதராபாத் நகரத்திற்கு வந்தார். இங்கு ஹோமியோபதி பயிற்சியில் சேர்ந்தார். இந்தப் பயிற்சியை நிறைவு செய்ததும் தில்ஷுக் நகரில் ஹோமியோபதி க்ளினிக் ஒன்றை தொடங்கினார். இந்த சமயத்தில் தான் ஹைதராபாத்தில் ரியல் எஸ்டேட் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கி இருந்தது.
அந்த சமயத்தில் ஹைதராபாத் நகரம் முழுவதுமே வீடுகளுக்கு அதிக தேவை இருந்தது. இதனால் காலி மனைகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தன. இந்நிலையில் தனது நண்பர்களின் அறிவுரையை கேட்டு ரூ.50,000 முதலீடு செய்து காலி மனை ஒன்றை சொந்தமாக வாங்கினார். மூன்று வருடங்களுக்குப் பிறகு அந்த இடத்தை ரூ.1,50,000-க்கு விற்பனை செய்தார் ராவ்.
இந்த தொழிலில் நல்ல லாபம் வருகிறதே என நினைத்த ராவ், உடனடியாக ஹோமியோபதி மருத்துவமனையை மூடிவிட்டு ரியல் எஸ்டேட் தொழிலை தொடங்கினார். 1981-ம் ஆண்டு My Home Group என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை ஆரம்பித்தார். இன்று இந்நிறுவனம் ஹைதராபாத்தின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.
இதையும் படிக்க: ஐடி நிறுவன வேலையை உதறியவர் இன்று ரூ.260 கோடி நிறுவனத்துக்கு அதிபதி… யார் இவர் தெரியுமா?
அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பை முடித்துள்ள ராமேஷ்வர் ராவ், ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (DHMS) படிப்பில் டாக்டரேட் பட்டம் பெற்றுள்ளார். ஆரம்பத்தில் வர்த்தக மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு சொத்துகளை வாங்கும் நோக்கத்திலேயே My Home Constructions நிறுவனத்தை தொடங்கினார்.
அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வேறு தொழிலிலும் ஈடுபட ஆரம்பித்தார். மஹா சிமெண்ட் என்ற சிமெண்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருபது வருடங்களுக்கு மேல் பதவி வகித்துவந்த ராமேஷ்வர் ராவ், தற்போது My Home Constructions நிறுவனத்தின் தலைவராக இருந்து வருகிறார். இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.4,000 கோடியாகும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)