கன்னியாகுமரி மாவட்டத்தில் காய்கறிகள் விளைச்சல் குறைந்ததாலும், தேவை அதிகரித்துள்ளதாலும் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. குமரி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் நாகர்கோவிலில் உள்ள அப்டா, வடசேரியில் உள்ள காய்கறி சந்தைகள் பிரதான சந்தைகளாக உள்ளன. இதே போன்று ஆரல்வாய்மொழி, காவல் கிணறு பகுதிகளிலும் காய்கறி சந்தைகள் இயங்கி வருகின்றன.
குமரி மாவட்ட காய்கறி சந்தைகளில் காய்கறிகளின் வரத்து மற்றும் உற்பத்தி காரணமாக வாரந்தோறும் காய்கறிகள் விலைகள் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகின்றன. குமரி சந்தையில் காய்கறிகளின் இன்றைய விலைப் பட்டியலைத் தற்போது பார்க்கலாம்…
குமரி காய்கறி மார்கெட் நிலவரப்படி இஞ்சி கிலோ 160, தக்காளி கிலோ 100, சின்ன வெங்காயம் கிலோ 70, பெரிய வெங்காயம் கிலோ 50, கேரட் கிலோ 60, பீட்ரூட் கிலோ 50, பீன்ஸ் கிலோ 130, பச்சை மிளகாய் கிலோ 50, வெண்டைகாய் கிலோ 30, கத்தரிகாய் கிலோ 60, பூசணிக்காய் கிலோ 30, பாகற்காய் கிலோ 70, புடலை கிலோ 50, மாங்காய் கிலோ 30, வெள்ளரிக்காய் 40, முருங்கைக்காய் கிலோ 200, உருளைக்கிழங்கு கிலோ 40, பூண்டு கிலோ 300, காலிஃப்ளவர் கிலோ 50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: நினைத்த காரியம் நிறைவேறும்… சுவாமி திருக்கல்யாணத்திற்கு சீர் கொடுக்கும் பக்தர்கள்…
இதுகுறித்து கன்னியாகுமரி உள்ளூர் வியாபாரிகள் தெரிவிக்கையில் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து காய்கறிகளின் வரத்து குறைந்து உள்ளதால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. மேலும், சுப முகூர்த்த நாட்கள் போன்ற விசேஷ நாட்கள் வருவதால் காய்கறிகளின் தேவை அதிகம் இருக்கும் நிலையில் அதற்கேற்ற வரத்து இல்லாததால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாகக் குமரி மாவட்டத்தில் விளையும் காய்கறிகளும் சந்தைக்கு வருவதில்லை எனத் தெரிவித்தனர். காய்கறிகளின் விலை அதிகரித்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
