சிங்கப்பூர்: கடந்த மாதம் விபத்துக்குள்ளான சிங்கப்பூர் விமானப்படைக்கு சொந்தமான F-16 விமானத்தின் காரணத்தை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
விமானத்தின் கட்டுப்பாட்டு கூறுகளில் தேய்மானம் ஏற்பட்டதே இதற்குக் காரணம் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் விமானப்படை கட்டுப்பாட்டு கருவியை தொடர்ந்து சரிபார்க்க முடிவு செய்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தெங்கா விமானப்படை தளத்தில் கடந்த மாதம் 8ம் தேதி எஃப்-16 போர் விமானம் விபத்துக்குள்ளானது.
விமானி தன்னை விடுவித்து பத்திரமாக வெளியேறி உள்ளார்.

