• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

அமெரிக்காவை 18 ரன்களில் வென்ற தென் ஆப்பிரிக்கா | T20 WC ‘சூப்பர் 8’ சுற்று | South Africa beats USA by 18 runs T20 world cup Super 8 round

GenevaTimes by GenevaTimes
June 19, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
அமெரிக்காவை 18 ரன்களில் வென்ற தென் ஆப்பிரிக்கா | T20 WC ‘சூப்பர் 8’ சுற்று | South Africa beats USA by 18 runs T20 world cup Super 8 round
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆன்டிகுவா: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘சூப்பர் 8’ சுற்றுப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா விளையாடின. இதில் 18 ரன்களில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்கா.

மேற்கு இந்தியத் தீவுகளின் ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது.

டிகாக் 74 ரன்கள், கேப்டன் மார்க்ரம் 46 ரன்கள், கிளாசன் 36 ரன்கள் மற்றும் ஸ்டப்ஸ் 20 ரன்கள் எடுத்தனர். 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அமெரிக்கா விரட்டியது. ஆண்ட்ரீஸ் கவுஸ் மற்றும் ஸ்டீவன் டெய்லர் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர்.

14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஸ்டீவன் டெய்லர் ஆட்டமிழந்தார். நிதிஷ் குமார், கேப்டன் ஆரோன் ஜோன்ஸ், கோரி ஆண்டர்சன், ஷயான் ஜஹாங்கீர் ஆகியோர் விரைந்து விக்கெட்டை இழந்தனர். 76 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது அமெரிக்கா.

6-வது விக்கெட்டுக்கு ஆண்ட்ரீஸ் கவுஸ் மற்றும் ஹர்மீத் சிங் இணைந்து 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 22 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஹர்மீத் சிங் ஆட்டமிழந்தார். ஷம்சி வீசிய 18-வது ஓவரில் 22 ரன்கள் எடுத்து அமெரிக்கா அச்சுறுத்தியது. இரண்டாவது இன்னிங்ஸில் ஒரே ஓவரில் எடுக்கப்பட்ட அதிக ரன் ஓவராக அது அமைந்தது.

20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது அமெரிக்கா. ஆண்ட்ரீஸ் கவுஸ் 47 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் 18 ரன்களில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்கா. ரபாடா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். நோர்க்யா, கேஷவ் மகாராஜ் மற்றும் ஷம்சி தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.



Read More

Previous Post

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ஜூன் 21-ல் காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் | Nationwide protest on June 21 against NEET exam malpractices – Congress announced

Next Post

ஹஜ் பயணிகள் 550 பேர் உயிரிழப்பு… மெக்காவில் நடந்தது என்ன?

Next Post
ஹஜ் பயணிகள் 550 பேர் உயிரிழப்பு… மெக்காவில் நடந்தது என்ன?

ஹஜ் பயணிகள் 550 பேர் உயிரிழப்பு… மெக்காவில் நடந்தது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin