வங்கதேசத்திற்கு எதிரான உள்ளூரில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை டி20 தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை பாகிஸ்தான் வீரர்கள் வெளிப்படுத்திய நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
நடப்பு உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றன. இதில் பாகிஸ்தான் அணி கனடா மற்றும் அயர்லாந்து உடனான போட்டியை தவிர்த்து, இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் நடந்த போட்டியில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
குறிப்பாக அந்த அணியின் மூத்த வீரர்கள் பாபர் ஆசம், ரிஸ்வான் உள்ளிட்டோர் படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அந்நாட்டு ரசிகர்களுடன் முன்னாள் வீரர்களும் கடும் அதிருப்தியடைந்து, கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்
மேலும், உலகக்கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தான் அணியின் பர்ஃபார்மென்ஸ் குறித்த, பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனிடம் கிரிக்கெட் வாரியம் விரிவான ரிப்போர்ட் கேட்டுள்ளது. இதன் அடிப்படையில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.
இதற்கிடையே, வங்கதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில், பாகிஸ்தான் அணியின் கேப்டனாக ஷான் மசூத் நியமிக்கடவுள்ளதாகவும், மூத்த வீரர்கள் பாபர் ஆசம், ரிஸ்வான், ஷாகின் அப்ரிதி உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதையும் படிங்க – ‘இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாட வேண்டும்’ – ஸ்டீபன் ஃப்ளெமிங் கருத்து
இதேபோன்று உலகக்கோப்பை டி20 படு தோல்விக்கு பொறுப்பேற்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் பொறுப்பை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)