உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கான போட்டிகள் இன்று தொடங்கியுள்ளன. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா அணிகளும், அடுத்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் மோதுகின்றன.
நடப்பு உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றன. இதில் பாகிஸ்தான் அணி கனடா மற்றும் அயர்லாந்து உடனான போட்டியை தவிர்த்து, இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் நடந்த போட்டியில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இந்த சுற்றில் நாளை நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டி வெஸ்ட் இண்டீஸின் பிரிட்ஜ்டவுன், கென்சிங்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த மைதானத்தில் முதல் போட்டியின் சராசரி 158 ரன்கள். முதலில் பேட்டிங் செய்த அணி 70 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இங்கு டாஸ் வின் பண்ணும் அணியின் கேப்டன்கள் பெரும்பாலும் பேட்டிங்கை தேர்வு செய்வார்கள்.
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இந்த ஆடுகளம் அமையும். 67 சதவீத விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
வானிலையை பொருத்தளவில் நாளை இங்கு சுமார் 28 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை இருக்கும். வானம் மேக மூட்டத்துடன் காணப்படலாம். அத்துடன் மிக லேசான மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
.
&w=750&resize=750,375&ssl=1)
