சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்டிமேட் ஸ்டார் தல அஜித். தமிழில் இவர் நடித்த முதல் படம் ‘அமராவதி’ அந்தப் படம் அவ்வளவு வெற்றியை கொடுக்கவில்லைஎன்றாலும் . 1995 இல் வெளியான ‘ஆசை’ படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து இவர் காதல் கோட்டை ,காதல் மன்னன் ,வாலி ,வில்லன், மங்காத்தா அட்டகாசம் ,பூவெல்லாம் உன் வாசம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அமர்க்களம் படத்தில் நடித்த போதுதான் நடிகை ஷாலினிக்கும், அஜித்திற்கும் இடையில் காதல் மலர்ந்தது.மேலும் இவர்களுக்கு அனுஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

