24 ஆண்டுகளுக்குப் பிறகு, வடகொரியா சென்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
சைபீரியாவில் உள்ள ராக்கெட் ஏவுதள மையத்துக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் சென்ற வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்தித்துப் பேசினார். அப்போது, வடகொரியாவுக்கு வருமாறு புதினுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், பியாங்யாங் விமான நிலையம் சென்ற புதினை, அதிபர் கிம் ஜோங் உன் நேரில் வரவேற்றார். புதின் கடைசியாக கடந்த 2000-ஆம் ஆண்டு ஜூலையில் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அதன் பிறகு தற்போது அவர் வடகொரியா சென்றுள்ளார்.
இதேபோன்று, கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர், மற்றொரு நாட்டுத் தலைவரை இதுவரை வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் அழைத்துப் பேசியதில்லை. இந்த சூழலில் இவர்களின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறும் என கூறப்படுகிறது.
முன்னதாக, இரு நாட்டு தலைவர்களும் புதிய ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட திட்டமிட்டு உள்ளதாக புதினின் உதவியாளர் யூரி உஷாகோவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
