9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா நாடுகளில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முடிவில் இந்தியா, அமெரிக்கா, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
சூப்பர் 8 சுற்றில் குரூப் 1 பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளும், குரூப் 2 பிரிவில் மேற்கிந்திய தீவுகள், அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.
2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. சூப்பர் 8 சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறவுள்ளன.
இந்தநிலையில், சூப்பர் 8 சுற்று இன்று தொடங்கும் நிலையில், அமெரிக்கா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆண்டிகுவா நகரில் நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க:
‘இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாட வேண்டும்’ – ஸ்டீபன் ஃப்ளெமிங் கருத்து
இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று தொடங்கும் நிலையில், இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தோல்வியே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்குள் கம்பீரமாக அடியெடுத்து வைத்துள்ளது. சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை நாளை எதிர்கொள்கிறது.
இதனைத் தொடர்ந்து வரும் 22-ஆம் தேதி வங்கதேச அணியுடனும், வரும் 24-ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியுடனும் இந்திய அணி பலப்பரீட்சை நடத்துகிறது.
சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்கும். இதேபோல் ஆப்கானிஸ்தான் அணி வீரர்களும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
