கோலாலம்பூர்:
ஜாலான் புடுவிலுள்ள தொடர் வீட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் ஆறு வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின.
குறித்த சம்பவம் தொடர்பில் இரவு 8:04 க்கு தகவல் கிடைத்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் செயற்பாட்டு மையம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தகவல் கிடைத்ததும் புடு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தினருடன், ஜாலான் துன் தீயணைப்பு நிலையம்,
ரசாக் தீயணைப்பு நிலையம், செராஸ் தீயணைப்பு நிலையம், ஜலான் ஹாங் துவா தீயணைப்பு நிலையம், டேசா பெட்டாலிங் தீயணைப்பு நிலையம் ஆகியவற்றின் உதவியுடன்,
மூத்த செயற்பாட்டு அதிகாரி லோகேஸ்வரன் லவன் தலைமையில் மொத்தம் 25 பேர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்ததும், அங்கு ஒரு 7 கதவுகளை உள்ளடக்கிய தொடர் வீட்டில் தீச்சம்பவம் நிகழ்ந்ததாகவும், அதில் 6 வீட்டு அலகுகள்
100 விழுக்காடு நாசமாகியிருந்தது.
மேலும் அங்குள்ள 1 வீட்டின் அலகு 40 விழுக்காடு எரிந்திருந்து நாசமானதுடன் அங்கிருந்த 3 கார்கள்
மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களும் 100 விழுக்காடு தீயால் அழிக்கப்பட்டன.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்தவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று அவ்வறிக்கையில் அது தெரிவித்துள்ளது.


