• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கஸ்டம்ஸ் அதிகாரிகளை போல நடித்து பணம் பறிக்கும் கும்பல்கள்… எச்சரிக்கையாக இருப்பது எப்படி…???

GenevaTimes by GenevaTimes
June 18, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
கஸ்டம்ஸ் அதிகாரிகளை போல நடித்து பணம் பறிக்கும் கும்பல்கள்… எச்சரிக்கையாக இருப்பது எப்படி…???
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய கஸ்டம்ஸ் அதிகாரிகளைப் போல நடித்து ஏமாற்றி வரும் மோசடி கும்பல்களிடமிருந்து தப்பிப்பதற்கான ஒரு சில வழிமுறைகளையும், எச்சரிக்கையையும் தி சென்ட்ரல் போர்ட் ஆஃப் இன்டைரக்ட் டாக்ஸ் அன்ட் கஸ்டம்ஸ் (The Central Board of Indirect Taxes and Customs – CBIC) துறை சமீபத்தில் அதன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களிடம் போன் கால்கள் மற்றும் SMS மூலமாக தொடர்புகொண்டு, ஒரு பயத்தை ஏற்படுத்தி, பணத்தை இந்த கும்பல்கள் பறித்து வருகின்றன. பொதுமக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இந்திய கஸ்டம்ஸ் அதிகாரிகளை போல நடித்து திருடும் மோசடி கும்பல் பற்றிய பல்வேறு உண்மை சம்பவங்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி போர்ட்டல்கள் போன்றவற்றில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனை எதிர்கொள்வதற்காக CBIC செய்தித்தாள், விளம்பரங்கள், SMS / இமெயில் அலர்ட்டுகள், சோஷியல் மீடியா மூலமாக எச்சரிக்கைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

விளம்பரம்

இது போன்ற மோசடிகளில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட சில குறிப்புகளையும் CBIC வழங்கியுள்ளது. பொதுமக்கள் முதலில் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு இந்திய கஸ்டம்ஸ் அதிகாரியும் பொதுமக்களை போன் கால், SMS அல்லது இமெயில் மூலமாக பிரைவேட் அக்கவுண்டுகளில் பேமெண்ட் செலுத்தும்படி தொடர்பு கொள்ள மாட்டார். சந்தேகத்துக்குரிய போன் கால்களை உடனடியாக துண்டித்து, மெசேஜ்களை கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள்.

இதையும் படிக்க:
அன்று ஆட்டோ ஓட்டுனர்; இன்று ரூ.800 கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் உரிமையாளர்; யார் இந்த சாதனை மனிதர்?

விளம்பரம்

கேட்கக்கூடிய நபரின் நம்பகத்தன்மையை சோதிக்காமல் உங்களுடைய பாஸ்வோர்டுகள், CVV, ஆதார் நம்பர் போன்ற விவரங்களை வழங்கவோ அல்லது பணத்தை அனுப்பவோ வேண்டாம். எதிரே பேசக்கூடிய நபர் இந்திய கஸ்டம்ஸ் அதிகாரி என தெரிவித்தால் அவருடைய டாக்குமென்ட் அடையாள எண்ணை (Document Identification Number – DIN) வாங்கி https://esanchar.cbic.gov.in/DIN/DINSearch என்ற CBIC வெப்சைட்டில் சோதித்துப் பார்க்கவும். மோசடிகள் குறித்த வழக்குகளை உடனடியாக சைபர் கிரைம் போர்ட்டல் அல்லது (www.cybercrime.gov.in) 1930 என்ற உதவி எண்ணை அழைத்து புகார் அளிக்கவும்.

விளம்பரம்

மோசடிக்காரர்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் யுத்திகள்:

போலி போன் கால்கள்/SMS: கஸ்டம்ஸ் அதிகாரிகளைப் போல நடித்து உங்களுடைய பேக்கேஜ் ஒன்று கஸ்டம்ஸ் அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பேமெண்ட் செலுத்த வேண்டும் என்றும் கூறி மோசடி செய்யப்படுகிறது.

இதையும் படிக்க:
FD திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றிய முன்னணி வங்கி! முழு விவரம்

பாதிக்கப்பட்டவர்களுக்கு அழுத்தம் கொடுப்பது: பேக்கேஜ்களை விடுவிக்க வேண்டுமானால் உடனடியாக பணம் செலுத்தியாக வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களை ஒருவித அழுத்தத்திற்கு மோசடிக்காரர்கள் ஆளாக்குகிறார்கள்.

பணம் கேட்பது:

போதை மருந்து, வெளிநாட்டு பணம், போலி பாஸ்போர்ட் போன்ற சட்டவிரோதமான பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களின் பெயரில் பிடிபட்டிருப்பதாக கூறி, அவர்களை மிரட்டி பணம் பறிக்கப்படுகிறது.

விளம்பரம்

.

Read More

Previous Post

பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடியை பிரதமர் மோடி விடுவித்தார் @ வாராணசி | Modi in Varanasi: PM releases ₹20,000 crore under PM KISAN scheme

Next Post

ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கிய முதல் ஆசியான் நாடு தாய்லாந்து – Malaysiakini

Next Post
ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கிய முதல் ஆசியான் நாடு தாய்லாந்து – Malaysiakini

ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கிய முதல் ஆசியான் நாடு தாய்லாந்து – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin