2023 – 24 நிதியாண்டிற்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நெருங்கி வருவதால் வரி செலுத்துவோர் கடைசி நேர சிக்கல்களை தவிர்ப்பதற்கு உடனடியாக அதற்கான செயல்முறையை துவங்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
ITR தாக்கல் செய்வது முன்பு போல் இல்லாமல் இப்போது மிக எளிதான செயல்முறையாக மாறிவிட்டது. வருமான வரி போர்ட்டலுக்கு சென்று ஆன்லைனில் இதனை எளிதாக நிறைவு செய்யலாம். ஆனால் ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்யும் செயல்முறையை துவங்குவதற்கு முன்பு ஒரு சில டாக்குமெண்ட்ஸ்களை தயார்நிலையில் வைப்பது அவசியம்.
அவற்றில் PAN கார்டு, ஆதார் அட்டை, பேங்க் ஸ்டேட்மெண்ட், படிவம் 16, டொனேஷன் செய்ததற்கான ரசீதுகள், புரோக்கர் பிளாட்ஃபார்மிடமிருந்து பெறப்பட்ட ஸ்டாக் டிரேடிங் ஸ்டேட்மெண்டுகள், ஹெல்த் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு பேமெண்ட் செலுத்தப்பட்ட ரசீதுகள், PAN கார்டுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு குறித்த தகவல், ஆதாரில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் நம்பர், மற்றும் வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட வட்டி சான்றிதழ்கள் போன்ற டாக்குமெண்ட்கள் உங்களுக்கு தேவைப்படும்.
படி 1:
அதிகாரப்பூர்வ வருமான வரி இ-தாக்கல் வெப்சைட்டுக்கு சென்று, ‘Login’ என்பதை கிளிக் செய்து, உங்களுடைய PAN நம்பரை யூசர் ID ஆக என்டர் செய்து, ‘Continue’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். செக்யூரிட்டி மெசேஜ் பெட்டியை டிக் செய்துவிட்டு, உங்களுடைய பாஸ்வேர்டை என்டர் செய்து பின்னர் ‘Continue’ என்பதை கிளிக் செய்க.
படி 2:
’e-File’ டேபில் உள்ள ‘Income Tax Returns’ என்பதை கிளிக் செய்து, பின்னர் ‘File Income Tax Return’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
படி 3:
‘Assessment Year’ என்பதற்கு, FY 2023–24 தாக்கல் செய்ய ‘AY 2024-25’ என்பதையும், FY 2022–23 தாக்கல் செய்ய ‘AY 2023-24’ என்பதையும் தேர்வு செய்க. பின்னர் எந்த வழியே தாக்கல் செய்யப் போகிறீர்கள் என்பதற்கு ‘Online’ என்பதை தேர்வு செய்யவும். அசல் ரிட்டன் தாக்கல் செய்யப் போகிறீர்களா அல்லது ஏற்கனவே தாக்கல் செய்த ரிட்டனை மாற்றி அமைக்க போகிறீர்களா என்பதை சரியாக குறிப்பிடவும்.
இதையும் படிக்க:
அன்று ஆட்டோ ஓட்டுனர்; இன்று ரூ.800 கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் உரிமையாளர்; யார் இந்த சாதனை மனிதர்?
படி 4:
Individual, HUF, அல்லது Others – என்ற மூன்று ஆப்ஷனில் உங்களுக்கான சரியான ஒன்றை தேர்வு செய்யவும். தனி நபர்கள் ‘Individual’ என்பதை தேர்வு செய்துவிட்டு ‘Continue’ என்பதை கிளிக் செய்யவும்.
படி 5:
இப்போது உங்களுடைய சூழ்நிலையை பொறுத்து சரியான ITR படிவத்தை தேர்வு செய்யுங்கள்.
படி 6:
அடுத்தபடியில் ITR தாக்கல் செய்வதற்கான சரியான காரணத்தை தேர்வு செய்யவும்.
படி 7:
PAN, ஆதார், பெயர், பிறந்த தேதி, தொடர்பு விவரங்கள் மற்றும் வங்கி விவரங்கள் போன்றவை முன்கூட்டியே நிரப்பப்பட்டிருக்கும். அவற்றை சரி பாருங்கள்.
இதையும் படிக்க:
கஸ்டம்ஸ் அதிகாரிகளை போல நடித்து பணம் பறிக்கும் கும்பல்கள்… எச்சரிக்கையாக இருப்பது எப்படி…???
மேலும் உங்களுடைய வங்கி கணக்கு விவரத்தை வழங்கவும். ஒருவேளை அது முன்கூட்டியே கொடுக்கப்பட்டிருந்தால் அது சரிதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். அனைத்து பொருந்தக்கூடிய வருமானம், விலக்குகள் மற்றும் கழிவுத் தொகைகளை படிப்படியாக வழங்கவும்.
நீங்கள் பணிபுரியும் நிறுவனம் மற்றும் வங்கி போன்ற விவரங்களை சரி பாருங்கள். ஒருவேளை நீங்கள் ஏதேனும் வரி செலுத்த வேண்டி இருந்தால் அதற்கான பேமெண்டை செலுத்தவும்.
படி 8:
ITR தாக்கல் செய்த 30 நாட்களுக்குள் ஆதார் OTP, EVC, நெட் பேங்கிங் அல்லது ITR-V நகலை CPC, பெங்களூரு அலுவலகத்திற்கு அனுப்பிவைப்பதன் மூலமாக வெரிஃபை செய்ய வேண்டும். இதனை நீங்கள் செய்யத் தவறினால் நீங்கள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்று கருதப்படும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)