நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நோர்வூட் டங்கள் வனப்பகுதியில் இருந்து 04 வயது குழந்தை ஒன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இந்த சம்பவம் இன்று (18) இடம்பெற்றுள்ளது.
லக்ஸபான பகுதியில் இருந்து டங்கள் தோட்டப்பகுதிக்கு திருமணம் வைபவம் ஒன்றுக்கு குறித்த ஆண் குழந்தையை அவருடைய பெற்றோர்கள் அழைத்து வந்திருந்தனர்.
குழந்தை விளையாடி கொண்டிருந்த நிலையில் திடீரென குழந்தை காணாமல் போனதை தொடர்ந்து நேற்று (17) மாலை நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்தனர்.
முறைபாட்டுக்கு அமைய பொலிஸாரும், பொதுமக்களும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டிவி கெமராவின் காணொளியின் உதவியோடு குழந்தை மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக டிக்கோயா கிளிங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுவன் கானாமல் போனமை யாராயின் திட்டமிட்ட செயல்பாடா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்
மஸ்கெலியா நிருபர்


