• Login
Monday, March 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

4 மெய்டன் ஓவர்கள் வீசி லாக்கி பெர்குசன் சாதனை | T20 WC | 4 maiden overs bowled by Lockie Ferguson T20 WC record

GenevaTimes by GenevaTimes
June 18, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
4 மெய்டன் ஓவர்கள் வீசி லாக்கி பெர்குசன் சாதனை | T20 WC | 4 maiden overs bowled by Lockie Ferguson T20 WC record
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டிரினிடாட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் – சி’ பிரிவு ஆட்டத்தில் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிராக நியூஸிலாந்து அணியின் பவுலர் லாக்கி பெர்குசன், 4 ஓவர்கள் வீசி ரன் ஏதும் கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் வீசிய 24 பந்துகளிலும் ரன் ஏதும் கொடுக்காத முதல் பவுலர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். திங்கட்கிழமை அன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பப்புவா நியூ கினியா அணி 19.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

முதல் இன்னிங்ஸின் 5, 7, 12 மற்றும் 14-வது ஓவர்களை அவர் வீசி இருந்தார். இந்த போட்டியில் 7 விக்கெட்டுகளில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. இருந்தாலும் அந்த அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. தனது செயல்பாடு மகிழ்ச்சி தந்ததாகவும். பெரிய நம்பிக்கையுடன் களம் கண்ட தங்களது அணி முதல் சுற்றோடு வெளியேறுவது வருத்தம் தருவதாகவும் லாக்கி பெர்குசன் தெரிவித்தார். ஆட்ட நாயகன் விருதை அவரே வென்றார்.

டி20 கிரிக்கெட்டில் இதற்கு முன்பும் 4 ஓவர்களை மெய்டனாக வீசி உள்ளார் கனடாவின் சாத் ஜாபர். கடந்த 2021-ல் பனாமா அணிக்கு எதிராக அவர் அந்த சாதனையை புரிந்திருந்தார். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதற்கு முன்னர் அதிகபட்சம் 2 ஓவர்கள் மெய்டனாக வீசப்பட்டுள்ளது. 2012-ல் இலங்கையின் அஜந்தா மென்டிஸ் மற்றும் இந்தியாவின் ஹர்பஜன் சிங் இந்த சாதனையை படைத்துள்ளனர்.



Read More

Previous Post

பாதுகாப்பான பெட்டி, இருக்கை எது? – News18 தமிழ்

Next Post

‘தோனிக்கு மாற்றான’.. விக்கெட் கீப்பர் இவர்தான்?

Next Post
‘தோனிக்கு மாற்றான’.. விக்கெட் கீப்பர் இவர்தான்?

‘தோனிக்கு மாற்றான’.. விக்கெட் கீப்பர் இவர்தான்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin