மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையம் அருகே நேற்று(ஜூன் 18) காலை 8.45 மணியளவில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது அதே ரயில் பாதையில் வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணிகள் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சரக்கு ரயிலின் ஓட்டுநா் மற்றும் துணை ஓட்டுநரும் இந்த விபத்தில் உயிரிழந்தனா்.
47 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒரு குழந்தை உள்பட 4 பேருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

&w=1200&resize=1200,675&ssl=1)