• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ’பொருளாதாரத் தீர்வுகளை தேடவில்லை’

GenevaTimes by GenevaTimes
June 17, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ’பொருளாதாரத் தீர்வுகளை தேடவில்லை’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



அடுத்த ஐந்து வருடங்களில் செயற்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகளே இலங்கையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசியல் தீர்வுகளைத் தேடும் இந்நாட்டு மக்கள் பொருளாதாரத் தீர்வுகள் குறித்து கவனம் செலுத்தவில்லை என்றார். 


மன்னாரில் ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்ற இளையோர் மற்றும் வர்த்தகர்களுடனான சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.


“சுபீட்சமான எதிர்காலத்திற்கான பயணம்” என்ற பெயரில் இளைஞர் அமைப்பு ஏற்பாடு ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு, 2023/2024 உயர்தரப் பரீட்சைக்கு தெரிவான மாணவர்களுக்கு ஜனாதிபதியால் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு வட மாகாண கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது இளைஞர் மத்தியில் சென்று அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த ஜனாதிபதி, அவர்களின் கேள்விகளுக்கும் சாதகமான பதில்களை வழங்கினார்.


கொவிட் – பொருளாதார நெருக்கடியின் காரணமாக 4 வருடங்களாக தொழில்களை வழங்க முடியாமற்போனதோடு, தொழில் கிடைத்த பலரும் அவற்றை இழந்து நிற்கும் நிலைமையும் ஏற்பட்டது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.


அதனால் புதிய பாதையில் சென்று தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டுமா, இல்லாவிட்டால் பழைய முறையில் சென்று வீழ்ச்சியடைவதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.


அதனையடுத்து மன்னார் மாவட்ட வர்த்தர்களுடன் நேற்று (16) இடம்பெற்ற சந்திப்பில், அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டங்களுடன் முன்னோக்கிப் பயணிக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் பெருமளவான முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருகைத் தருவர் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

காலத்துக்குக் காலம் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றிக்கொள்ளாமல், சரியான பொருளாதாரக் கொள்கையைத் தொடர்ச்சியாகப் பின்பற்றினால் நாடு முன்னேற்றமடையும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.


அதற்காகவே பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலத்தைச் சமர்பித்திருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அதனை எந்தவொரு அரசாங்கமும் முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்றும் கூறினார்.


நீண்டகாலமாக அரசியல் ரீதியான தீர்வைத் தேடும் இந்நாட்டு மக்கள், ஒருபோதும் பொருளாதாரத்தின் பக்கமாக தீர்வைத் தேடவில்லை என்றும், சரியான பொருளாதாரக் கொள்கையின் ஊடாக மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.


சரிவடைந்திருந்த பொருளாதாரத்தை குறுகிய காலத்தில் கட்டியெழுப்ப தன்னால் முடிந்ததெனத் தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதாரம் வலுவடையும்போது, அதன் பலன்கள் சகல தரப்பினருக்கும் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் பரந்தளவான அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதி விளக்கமளித்தார்.


இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாண ஆளுநர். பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்டவர்களும் அரசியல் பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். 



Read More

Previous Post

டெல்லி விமான நிலையத்தில் திடீர் மின்தடை; செயல்பாடுகள் பாதிப்பு | Makkal Osai

Next Post

Mekedatu:’மேகதாது அணை தொடர்பாக பேச மத்திய அரசு அழைத்தால் தமிழக அரசே பங்கேற்காதே’ : பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்-if central government invites you to talk about mekedatu tamil nadu government will not participate says ramadoss

Next Post
Mekedatu:’மேகதாது அணை தொடர்பாக பேச மத்திய அரசு அழைத்தால் தமிழக அரசே பங்கேற்காதே’ : பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்-if central government invites you to talk about mekedatu tamil nadu government will not participate says ramadoss

Mekedatu:'மேகதாது அணை தொடர்பாக பேச மத்திய அரசு அழைத்தால் தமிழக அரசே பங்கேற்காதே’ : பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்-if central government invites you to talk about mekedatu tamil nadu government will not participate says ramadoss

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin