விடாமுயற்சிக்கும், படைப்பாற்றலுக்கும் உதாரணமானவர் ஹர்ஷ் ஜெயின். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இன்டர்னாக தன்னுடைய கேரியரை தொடங்கிய ஹர்ஷ், இன்று ட்ரீம்11 (Dream11) நிறுவனத்தின் சிஇஓ-வாக ஆகியுள்ளார். 150 முறைக்கும் மேல் புறக்கணிப்பிற்கு உள்ளான ஹர்ஷ் ஜெயினும், அவருடைய நண்பர் பாவித் ஷெத்தும் இணைந்து வெற்றிகரமாக ட்ரீம்11 நிறுவனத்தை தொடங்கினர். இன்று இந்நிறுவனத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? சுமார் ரூ.65,000 கோடி.
விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஜெயினிற்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு கிரிக்கெட். மும்பையில் பிறந்த இவர் மும்பை இந்தியன்ஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகராவார். அவருடைய ஆர்வமான தொழில்நுட்பம், கேமிங், விளையாட்டு ஆகிய அனைத்தையும் இணைத்து உருவாக்கிய நிறுவனமே ட்ரீம்11.
அமெரிக்காவில் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும்போது மைக்ரோசாஃஃப்ட் நிறுவனத்தில் இன்டர்னாக பணியாற்றிய போதுதான் ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸ் மீது ஜெயினிற்கு ஆர்வம் அதிகமானது. கல்லூரிப் படிப்பை முடித்ததும் இந்தியா திரும்பிய ஜெயின், சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்தார். 2008-ம் ஆண்டு தனது நண்பரோடு ட்ரீம்11 நிறுவனத்தை தொடங்கிய ஜெயின், அதுவரை வெறும் ஸ்போர்ட்ஸ் பிரியர்களாக இருந்தவர்களை ஃபேண்டஸி கேமிற்குள் கொண்டுவந்தார்.
இதையும் படிக்க:
அமுல் பாலகம் தொடங்குவது எப்படி? எவ்வளவு செலவாகும்? – சுயதொழில் தொடங்க சூப்பர் சான்ஸ்
ஆனால் இந்தப் பயணத்தில் இவர்கள் பல தடைகளை எதிர்கொண்டார்கள். சூதாட்டம் நடத்துகிறார்கள் எனக் கூறி இவர்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய பலரும் தயங்கினார்கள். ஆரம்ப காலங்களில் இவர்களின் பிசினஸ் யோசனையை யாருமே நம்பத் தயாராக இல்லை. இதுபோதாதென்று பல சட்ட சிக்கல்களையும் சந்திக்க நேர்ந்தது. ஆனால் இவர்கள் தங்கள் முயற்சியை கைவிடவில்லை. இன்று இந்தியாவிலேயே அனைவரும் அறிந்த ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸ் தளமாக ட்ரீம்11 திகழ்கிறது.
தனது தொழிலில் ஜெயின் வெற்றி அடைந்ததற்கு அவருடைய கல்வி பின்னணி தான் முக்கியமான காரணம். 2001 ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை Sevenoaks பள்ளியில் படித்த ஜெயின், அமெரிக்காவில் உள்ள பெனிசிலிவேனியா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் இஞ்சினியரிங் மற்றும் பொருளியல் துறையில் பட்டம் பெற்றார். அதோடு மட்டுமின்றி கொலம்பியா பிசினஸ் ஸ்கூலில் சேர்ந்து 2012-ம் ஆண்டு எம்பிஏ பட்டம் பெற்றார். ஒரு நிறுவனத்தை எப்படி லாபகரமாக நடத்த வேண்டும் என்பதை இதன் மூலமே ஜெயின் பெற்றார்.
இதையும் படிக்க:
உலகின் டாப் 10 உலர் பழங்களை உற்பத்தி செய்யும் நாடுகள் எவை தெரியுமா?
2013-ம் ஆண்டு பல் மருத்துவரான ரச்சனா ஷாவை திருமணம் செய்தார் ஜெயின். 2021-ம் ஆண்டு ரூ.72 கோடி செலவழித்து சொகுசு பங்களாவை இவர்கள் வாங்கிய செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு அருகிலேயே அமைந்துள்ளது இவர்களது வீடு. பல புறக்கணிப்புகளை சந்தித்த பிறகும் இன்று பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனத்தை ஜெயின் உருவாக்கியுள்ளார் என்றால், அதற்கு அவருடைய பொறுமையும், விடாமுயற்சியும் தொலைநோக்கு பார்வையுமே முக்கிய காரணமாகும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
