குறிப்பாக இந்தியா மற்றும் அமெரிக்கா அணியுடன் பாகிஸ்தான் அணி அடைந்த தோல்வியே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிலிருக்கும் வீரர்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல்களும் அணிக்கு பிரச்னையாக இருந்தன. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து கேப்டன் பாபர் அசாம் பேசியிருக்கிறார்.
அவர் கூறியதாவது, “‘எங்களது அணியின் பந்துவீச்சில் எந்த பிரச்னையும் இல்லை. பேட்டிங்கில்தான் பிரச்னை உள்ளது. சிறப்பாக பேட்டிங் செய்திருந்தால் அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சுலபமாக வீழ்த்தியிருப்போம். அந்த இரு அணிகளுக்கு எதிரான போட்டியில் சில தவறுகளையும் செய்து விட்டோம். விக்கெட்டுகளை இழக்கும்போது அது அதிக அழுத்தத்தைக் கொடுக்கிறது. எங்களிடம் நல்ல வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் ஓர் அணியாக நாங்கள் இணைந்து செயல்படவில்லை” என்று கூறியிருக்கிறார்.
பாபர் அசாம் சொல்லும் காரணத்தைப் பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்ட்டில் தெரியப்படுத்துங்கள்.

