குவாந்தான்: ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோல லாபிஸ், கம்போங் மெராபோஹ், ஜாலான் சுங்கை தாபான் என்ற இடத்தில் மீன்பிடிக்கச் சென்றபோது பயன்படுத்தப்படாத சுரங்கக் குளத்தில் குதித்த மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
முஹம்மது ஆடம் ஹாரிஸ் முகமட் அஸ்மான் (18) என்பவரின் உடல், நேற்று இரவு முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது அதிகாலை 2.50 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக லாபிஸ் காவல்துறைத் தலைவர் இஸ்மாயில் மான் தெரிவித்தார்
தெரெங்கானுவின் பெசூட்,Sekolah Menengah Kebangsaan Tengku Mahmud 2 என்ற பகுதியைச் சேர்ந்த மாணவர் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் தனது உறவினருடன் சுரங்கத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவரது மீன்பிடி கொக்கி துண்டிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர் சுரங்கத்தில் குதித்து, கொக்கியை மீட்டெடுக்க கரையிலிருந்து சுமார் 12 மீட்டர் நீந்தினார். கரைக்குத் திரும்பியபோது, அவர் போராடிக்கொண்டிருந்தார். பின்னர் நீரில் மூழ்கினார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோல லாபிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இஸ்மாயில் மேலும் கூறினார். லைஃப் ஜாக்கெட்டுகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட நீர் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.


