• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

96 வயது காதலியை கரம்பிடித்த 100 வயது முன்னாள் ராணுவ வீரர்… பிரான்ஸில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!

GenevaTimes by GenevaTimes
June 16, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
96 வயது காதலியை கரம்பிடித்த 100 வயது முன்னாள் ராணுவ வீரர்… பிரான்ஸில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரான்ஸில் நடந்த இரண்டாம் உலகப் போரின் நினைவு நாள் நிகழ்ச்சியில், தனது 96 வயது காதலியை கரம்பிடித்துள்ளார் 100 வயதான முன்னாள் ராணுவ வீரர்.

100 என்பது எப்போதும் மகிழ்ச்சிக்குரிய எண்ணாகவே மனிதர்களின் வாழ்க்கையில் இருந்துள்ளது. அது பாடத்தில் 100க்கு 100 எடுக்கும் போதும் சரி, பிடித்த கிரிக்கெட் வீரர் 100 அடிக்கும் போதும் சரி. மனது கொண்டாட்டத்தில் திக்குமுக்காடுவது வழக்கம்தான். அது போல், இங்கே 100 வயதில் ஒருவருக்கு மனதில் காதல் பட்டாம்பூச்சி பறந்துள்ளது.

விளம்பரம்

அந்த வயது முதிர்ந்த இளைஞரின் பெயர் ஹரோல்ட் டெரன்ஸ். அமெரிக்காவில் பிறந்த டெரன்ஸ், 1942ல் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தார். அதன்பின்னர் இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க விமானியாக ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவர், பழுதடைந்த பிரான்ஸ் விமானங்களை சீர்செய்து போரில் பெரும் பங்காற்றியதாக கூறப்படுகிறது. 1945 ஆம் ஆண்டு நாஜி சரணடைந்த பின்பு, பிணைக் கைதிகள் நாடு திரும்புவதற்கு உதவியதாகவும் சொல்லப்படுகிறது.

அதன்பின்னர், அமெரிக்கா திரும்பிய டெரன்ஸ், தெல்மாவை என்ற ஆசிரியரை 1948 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருந்தனர். 8 பேரக்குழந்தைகள், 10 கொள்ளுப்பேரக்குழந்தைகள் என 70 ஆண்டுகால மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு பிறகு 2018 ஆம் ஆண்டு தெல்மா காலமானார். அதன் பின்னர், வறண்ட கடைசி காலத்தை தனிமையில் கழித்துவிட எண்ணியிருந்த டெரன்ஸின் வாழ்க்கையில் வசந்தம் வீசியது போல் வந்தவர்தான் 96 வயது ஜீன் ஸ்வெர்லின்.

விளம்பரம்

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்வெர்லினுக்கு 21 வயதிலேயே திருமணம் ஆன நிலையில், கணவனை இழந்து இரண்டு மகள்கள், ஒரு மகனுடன் வாழ்ந்து வந்தார். இவருக்கும் ஏழு பேரக்குழந்தைகள், ஏழு கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு தனது மகள் மூலம் ஸ்வெர்லினின் அறிமுகம் டெரன்ஸ்க்கு கிடைத்தது. முதல் சந்திப்பிலேயே காதல் வயப்பட்ட டெரன்ஸ், சமூகம், குழந்தைகள் என தனக்குள் பூட்டி வைக்காமல் ஸ்வெர்லினிடம் காதலை கூறியுள்ளார். அதுவரை ஓன்சைடாக இருந்த காதல், டபுள் சைடாக மாறியது.

விளம்பரம்

திருமண முடிவுக்கு ஜோடி வந்த நிலையில், ஜெர்மன் படைகளை தங்கள் படை வீழ்த்தியதை கொண்டாடும், பிரான்ஸின் நார்மண்டி கடற்கரையில் நடக்கும் டி டே விழாவில் திருமணம் நடக்க வேண்டும் என்பது டெரன்ஸ் விருப்பமாக இருந்துள்ளது.

இதையும் படிங்க: 
2 நாட்களில் மரணம் நிச்சயம்… ஜப்பானில் பரவும் புதிய வகை நோய்… அச்சத்தில் உலக நாடுகள்!

அதன்படி, பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே 1600 களில் கட்டப்பட்ட Carentan-les-Marais தேவாலயத்தில் டெரன்ஸ் மற்றும் ஸ்வெர்லின் திருமணம் செய்துக்கொண்டனர்.

விளம்பரம்

அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் பங்கேற்ற இரவு விருது நிகழ்ச்சியில் புதுமண தம்பதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காதலுக்கு சாதி, மத பேதம் மட்டுமில்லை வயது பேதமும் தெரியாது என்பதற்கு எடுத்துக்காட்டாய் மாறி உள்ளார்கள் இந்த ஜோடி

.

Read More

Previous Post

கிரெடிட் கார்டு கடனில் மாட்டி தவிக்கிறீர்களா..? அப்ப இதை பண்ணுங்க ஈஸியா தப்பிச்சிடலாம்!

Next Post

அதிகமான சிங்கப்பூரர்கள் மலேசியாவை ஓய்வுபெறும் இடமாக கருதுகின்றனர் – Malaysiakini

Next Post
அதிகமான சிங்கப்பூரர்கள் மலேசியாவை ஓய்வுபெறும் இடமாக கருதுகின்றனர் – Malaysiakini

அதிகமான சிங்கப்பூரர்கள் மலேசியாவை ஓய்வுபெறும் இடமாக கருதுகின்றனர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin