டெபிட் கார்டுகளை ஒப்பிடும் பொழுது கிரெடிட் கார்டுகள் எப்பொழுதுமே நமக்கு கூடுதலாக ஒரு சில வசதிகளை தருவதுண்டு. ஆனால் அதற்கு ஏற்ற அபாயங்களும் அதில் இருக்கத்தான் செய்கிறது. அளவுக்கு அதிகமாக உங்களது கிரெடிட் கார்டை பயன்படுத்தி செலவுகளை செய்து விட்டால் நிச்சயமாக நீங்கள் மிகப்பெரிய கடன் வலைக்குள் மாட்டிக் கொள்வீர்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.
இது கிட்டத்தட்ட நீங்கள் ஒரு வங்கியில் இருந்து கடன் வாங்கியதற்கு சமம். அதனை நீங்கள் தான் அதிக வட்டி கொடுத்து திருப்பி அடைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். கிரெடிட் கார்டுகளை சரியான முறையில் பயன்படுத்தாமல், வீண் பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டவர்கள் ஏராளம். எனினும் இது குறித்து நீங்கள் பதட்டமடைய தேவையில்லை. எல்லாம் இன்னும் உங்கள் கையில் தான் உள்ளது. ஒருவேளை உங்களுடைய கிரெடிட் கார்டு கடனை அடைப்பதற்கு நீங்கள் சிரமப்பட்டு வருகிறீர்கள் என்றால் உங்கள் கடன் சுமையை ஓரளவு குறைப்பதற்கு உதவக்கூடிய வகையில் ஒரு சில குறிப்புகளை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க:
“PF கணக்கில் இந்த முன்பணம் இனி வழங்கப்படாது…” – இபிஎஃப்ஓ அறிவிப்பு
பில்லை EMI-ஐ ஆக மாற்றவும்
பல சமயங்களில் உங்களுடைய கிரெடிட் கார்டு பில்லை நீங்கள் சரியான நேரத்திற்கு திருப்பி செலுத்தாவிட்டால் அதற்கு பெனாலிட்டி மற்றும் அதிக வட்டியை செலுத்த வேண்டும். இதனை ஓரளவு எளிதாக்குவதற்கு கிரெடிட் கார்டு நிறுவனங்கள் உங்களுக்கு EMI ஆப்ஷனை வழங்குகிறது. இதனை பயன்படுத்தி நிலுவையில் உள்ள தொகையை நீங்கள் ஒவ்வொரு மாதமும் தவணையாக செலுத்தலாம். இதன் மூலமாக உங்களது கடன் சுமை குறைவதற்கு வாய்ப்புள்ளது.
பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதியை பயன்படுத்திக் கொள்ளவும்
இந்த பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதி மூலமாக உங்களுடைய தற்போதைய கிரெடிட் கார்டு கடன்களை மற்றொரு கிரெடிட் கார்டுக்கு நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். தற்போது நீங்கள் வைத்திருக்கும் கிரெடிட் கார்டில் அதிக கடன் இருக்கும் பட்சத்தில் வேறொரு வங்கியின் கிரெடிட் கார்டுக்கு இந்த நிலுவைத் தொகையை நீங்கள் டிரான்ஸ்ஃபர் செய்யலாம். ஆனால் அவ்வாறு செய்வதற்கு முன்பு புதிய கிரெடிட் கார்டு நிறுவனம் அல்லது வங்கி வசூலிக்கும் கட்டணங்கள் எவ்வளவு என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பில்லை அடைப்பதற்கு பர்சனல் லோன் எடுக்கலாம்
ஒருவேளை உங்களுடைய கிரெடிட் கார்டில் எக்கச்சக்கமான கடன்களை வைத்திருக்கிறீர்கள் என்றால் EMI மற்றும் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் தவிர ஒரு பர்சனல் லோன் எடுப்பது உங்களுக்கு ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கும். வழக்கமாக கிரெடிட் கார்டு கடனில் வசூலிக்கப்படும் வட்டியை காட்டிலும் பர்சனல் லோனுக்கான வட்டி விகிதங்கள் குறைவாகவே இருக்கும். கிரெடிட் கார்டில் அதிக அளவு கடன் வைத்திருப்பவர்களுக்கு குறிப்பாக இந்த ஆப்ஷன் உதவியாக இருக்கும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)