மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படக் கூடும் என்பதால் அவை ஒழிக்கப்பட வேண்டும் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் சுயேட்சையாக களம் காணும் ராபர்ட் கென்னடி ஜூனியர் என்பவர் தனது எக்ஸ் தள பதிவில், (Puerto Rico) பியூர்டோ ரிகோவின் முதன்மைத் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான நூற்றுக்கணக்கான முறைகேடு புகார்கள் வந்திருப்பதாகவும், அங்கு அதிர்ஷ்டவசமாக காகித வாக்குப்பதிவும் இருந்ததால், சிக்கல் கண்டறியப்பட்டு வாக்கு எண்ணிக்கை சரி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க குடிமக்கள் தங்கள் வாக்குகள் ஒவ்வொன்றும் எண்ணப்பட்டன என்பதையும், அவர்களின் தேர்தல்களை ஹேக் செய்ய முடியாது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இதையும் படிங்க : அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகனுக்கு 25 ஆண்டுகள் சிறை- நீதிமன்றம் அதிரடி
நேர்மையான மற்றும் நியாயமான தேர்தலுக்கு நாங்கள் உத்தரவாதம் அளிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவை ரீடிவீட் செய்துள்ள எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், மனிதர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு மூலம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து அதிகமாக இருப்பதால் அதனை ஒழிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)