• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Flower Market Price | சுப முகூர்த்த தினம் எதிரொலியால் விலையேறிய பூக்கள்… மல்லிகை பூ கிலோ எவ்வளவு தெரியுமா..?

GenevaTimes by GenevaTimes
June 16, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
Flower Market Price | சுப முகூர்த்த தினம் எதிரொலியால் விலையேறிய பூக்கள்… மல்லிகை பூ கிலோ எவ்வளவு தெரியுமா..?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பக்ரீத் பண்டிகை மற்றும் தொடர்ச்சியாக சுபமுகூர்த்தத் தினங்கள் வருவதன் காரணமாகப் பூக்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை பூ மார்க்கெட்டானது தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய பூ மார்க்கெட்களில் ஒன்றாகும். நிலக்கோட்டை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து விவசாயிகள் இந்த சந்தைக்குப் பூக்களைக் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் இருந்து அமெரிக்கா, துபாய், சிங்கப்பூர் மற்றும் தமிழகத்தில் பல இடங்களுக்கும் பூ ஏற்றுமதி செய்யப்படும். இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் பூக்களின் விலையும் மிக உயர்ந்து காணப்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிங்க: மளமளவென விலை உயர்ந்த மல்லிகை… கிலோ மல்லி எவ்வளோ தெரியுமா?

வழக்கமாகப் பண்டிகைக் காலங்களில் பூக்களின் விலையில் ஒருசில நாட்கள் மாற்றம் இருக்கும். ஆனால் இம்முறை பக்ரீத் பண்டிகையும் அதற்கடுத்ததாக தொடர்ந்து சுபமுகூர்த்தத் தினங்களும் வருகின்றன. இதனால் பூக்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

பூக்களின் வரத்தை விடத் தேவை அதிகரித்துள்ளதால் பூக்களுக்குத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் பூக்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 600 ரூபாய்க்கு விற்பனையான மல்லிப் பூவானது தற்போது ஒரு கிலோ ரூ.1200 முதல் ரூ.1300 வரை விற்பனை ஆகிறது. முல்லைப் பூவிற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏனைய பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

விளம்பரம்

இது குறித்து பூ வியாபாரி முருகேசன் கூறுகையில், “இந்த வருடம் பூக்களின் வரத்துக் குறைவாகவே காணப்பட்டன. மேலும், பக்ரீத் பண்டிகை வருவதாலும் பூக்களின் விலை மிக உயர்ந்து காணப்படுகின்றன. சாதாரணமாக 500 ரூபாய்க்கு விற்பனையாகும் மல்லிப் பூவானது இன்று 1200 ரூபாய் வரை விற்பனையாகிறது. முல்லைப்பூவானது 500 ரூபாய்க்கும், ஜாதி மல்லியானது 600 ரூபாய்க்கும் விற்பனையாகின்றது.

இதையும் படிங்க: உங்ககிட்ட இந்த ஒரு கார்டு இருந்தா போதும்… அரசின் பல திட்டங்களில் பயன்பெறலாம்…

பொதுவாகக் கனகாம்பரம் பூவானது 200 ரூபாய் வரை தான் விற்பனை ஆகும், ஆனால் தற்போது 800 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இங்கே பூக்களின் விலை உயர்வது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பூக்களின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

விளம்பரம்

.

Read More

Previous Post

Australia Cricket Team: டி20 உலகக் கோப்பையில் வீழ்த்தவே முடியாத அணியாக கம்பீரமாக வலம் வரும் ஆஸ்திரேலியா

Next Post

மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படக் கூடும்

Next Post
மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படக் கூடும்

மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படக் கூடும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin