முதல் அணியாக, பிளே ஆஃப் சுற்றுக்கு நுழையும் முனைப்புடன் உள்ள கொல்கத்தா அணி, மும்பையுடன் இன்று பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனின் 60ஆவது லீக் போட்டி, கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இதில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதவுள்ளது. 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நடப்பு சீசனில் 11 ஆட்டங்களில் விளையாடி அதில் 8 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
மேலும் ஒரு போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம், பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக செல்லும் வாய்ப்பு கொல்கத்தா வசம் உள்ளது. அதேசமயம், 5 முறை சாம்பியனான மும்பை அணி, நடப்புத் தொடரில் 12 போட்டிகளில் 8 தோல்விகளுடன் 9ஆவது இடத்தில் உள்ளது. மேலும், கொல்கத்தா உடனான கடந்த போட்டியிலும் மும்பை அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
எனவே, பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் ஆர்வத்துடன், மிகுந்த நம்பிக்கையாக கொல்கத்தா களம் இறங்கும் நிலையில், தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் மும்பையும் தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
