உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் இதுவரை நடந்து முடிந்த 3 போட்டிகளில் 1 ரன் மற்றும் 1 விக்கெட் கூட எடுக்காமல் உள்ளார்.
இது தொடர்பான மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுள்ளன. உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து மற்றும் கனடா அணிகள் ஏ குரூப்பில் இடம்பெற்றுள்ளன. இதில் இந்திய அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதேபோன்று 4 போட்டிகளில் விளையாடி 5 புள்ளிகளை பெற்றுள்ள அமெரிக்காவும் சூப்பர் 8க்கு சென்றுள்ளது.
மிகவும் சுமாரான ஆட்டத்தை இந்த தொடர் முழுவதும் வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறியது.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸின் ஆல் ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா இதுவரை விளையாடிய 3 போட்டிகளில், 1 ரன் மற்றும் 1 விக்கெட் கூட எடுக்காமல் உள்ளார்.
இதையும் படிங்க – டி20 உலகக்கோப்பை – சூப்பர் 8 சுற்றிலிருந்து பாகிஸ்தான் வெளியேற காரணமாக அமைந்த மழை
ஜூன் 5 ஆம் தேதி இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொண்டது. இதில் 1 ஓவர் வீசிய ஜடேஜா 7 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அவர் களம் இறங்காமலேயே இந்திய அணி வெற்றி பெற்றது. 9 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான மேட்ச்சில், முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார் ஜடேஜா. இந்த மேட்ச்சில் 2 ஓவர்கள் வீசிய அவர் 10 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
இதையும் படிங்க – டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய நியூசிலாந்து அணி – ரசிகர்கள் அதிர்ச்சி
12 ஆம் தேதி அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவருக்கு பேட்டிங் மற்றும் பவுலிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதேபோன்று அவர் 1 ரன் அவுட் அல்லது கேட்ச் கூட இந்த தொடரில் பிடிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
