டி-20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் வெளியேற அமெரிக்கா, இந்தியா மட்டுமின்றி மழையும் காரணமாகியுள்ளது.
அமெரிக்கா – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் ரத்தான நிலையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் போட்டியை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து மற்றும் கனடா அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் இந்தியா ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்ட நிலையில் இரண்டாமிடத்திற்கு பாகிஸ்தானா, அமெரிக்காவா என்ற போட்டி ஏற்பட்டது.
இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் அயர்லாந்து அணியுடன் அமெரிக்கா மோதவிருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதையும் படிக்க:
டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய நியூசிலாந்து அணி – ரசிகர்கள் அதிர்ச்சி
இதனால் மொத்த லீக் போட்டிகளான நான்கிலும் விளையாடி 5 புள்ளிகளை அமெரிக்கா பெற்றுள்ளது. ஆனால் பாகிஸ்தான் 3 போட்டிகளில் விளையாடி 2 புள்ளிகளையே பெற்றுள்ளது. எஞ்சியுள்ள போட்டியில் வென்றாலும் 4 புள்ளிகளை மட்டுமே பாகிஸ்தானால் பெற முடியும் என்பதால் தொடரில் இருந்து வெளியேறுகிறது.
அறிமுகத் தொடரிலேயே சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்று இந்திய வீரர்கள் நிறைந்த அமெரிக்க அணி அசத்தியுள்ளது. இந்த போட்டியின் முடிவுக்காக நம்பிக்கையுடன் காத்திருந்த பாகிஸ்தான் வீர்ரகளின் கனவில் மழை மண்ணை அள்ளிப்போட்டுள்து.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)