திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறும். அந்த வகையில் இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில், பக்ரீத் பண்டிகை ஒட்டி ஆடு விற்பனை சிறப்பாக நடைபெற்றது.
இந்த ஆட்டுச் சந்தைக்குத் திண்டுக்கல், சின்னாளம்பட்டி, செம்பட்டி போன்ற பல இடங்களிலிருந்து ஆடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. இந்த வாரம் 400க்கும் மேற்பட்ட செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகள் கொண்டு வரப்பட்டன. இதில் செம்மறி ஆடு வரத்தே அதிகமாகக் காணப்பட்டன.
வரும் 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் குர்பானி கொடுக்க தேவைப்படுவதால் ஆடுகள் நல்ல விலை போனது. சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை ஆனதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: மணக்க மணக்க மலர்கள் விற்பனை… தென் தமிழகத்தில் முக்கியமான திண்டுக்கல் பூ மார்க்கெட்…
இது குறித்து ஆடு விற்பனையாளர் சக்தி கூறுகையில், “ நிலக்கோட்டையில் பொதுவாக வாரம் தோறும் சனிக்கிழமைகளில் ஆட்டுச் சந்தை நடைபெறும். இந்த வாரம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடு விற்பனை சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாகச் செம்மறி ஆடு விற்பனை அதிகமாக இருக்கிறது. கிடாயின் கிலோவைப் பொருத்து 15 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை விற்பனை ஆனது. பண்டிகைக் காலம் என்பதால் விற்பனை கூடுதலாக உள்ளது வியாபாரிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
