எல்லோருக்கும் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால், கையில் காசு இருக்காது. யாரிடம் கேட்டாலும் இல்லை என்றுதான் சொல்லுவார்கள்.
வங்கிக்கு சென்று கேட்டால், அதற்கு அடமானமாக சொத்து அல்லது நகை என்று ஏதாவது ஒன்றை கேட்பார்கள். இந்த சூழ்நிலையில், எவ்வித அடமானமோ, உத்தரவாதமோ வழங்கலாமல் கடன் வாங்க எஸ்பிஐ சிஷு முத்ரா கடன் திட்டம் இருக்கிறது.
சிஷு முத்ரா கடன் திட்டம் நாட்டில் உள்ள சிறிய, நடுத்தர மற்றும் பெரிய தொழில்முனைவோர் தங்களது வணிகத்தை வளர்ப்பதற்காக வழங்கப்படுகிறது. பிரதமர் முத்ரா திட்டத்தின் ஒரு பகுதியாக, எஸ்பிஐ வங்கி சிஷு முத்ரா கடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில், அதிகபட்சமாக ரூ.50,000 வரை கடன் கிடைக்கும். இந்த கடனை, 69 மாதங்களுக்குள், அதாவது 5 ஆண்டுகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டும். இந்தக் கடனுக்கான வட்டி ஆண்டுக்கு 12%. இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், எந்த உத்தரவாதமும், அடமானமும் விண்ணப்பதாரர் கொடுக்க தேவையில்லை என்பதுதான்.
இந்த திட்டத்தின் கீழ், இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் கடன் பெறலாம். சொந்தமாக தொழில் தொடங்குபவர்களுக்கும், ஏற்கெனவே நடத்தி வரும் தொழிலை வளர்க்க விரும்புவோருக்கும் மட்டுமே இந்த கடன் கிடைக்கும். நீங்கள் ரூ.50,000க்கு மேல் கடன் பெற விரும்பினால், எஸ்பிஐ கிஷோர் முத்ரா கடனின் கீழ் ரூ.50,000 முதல் ரூ.5,00,000 வரை கடன் பெறலாம். மேலும், எஸ்பிஐ தருண் முத்ரா கடனின் கீழ், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். இந்தத் திட்டத்தின் பலனைப் பெற, நீங்கள் ஏதேனும் எஸ்பிஐ வங்கிக் கிளைக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரருக்கு 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வரவு – செலவு நடந்திருக்க வேண்டும். அத்துடன், ஜிஎஸ்டி வரி மற்றும் வருமான வரி கணக்குகள் பற்றிய முழுமையான பதிவுகளை வைத்திருக்க வேண்டும். ஆண், பெண் இருவருக்குமே இந்த கடன் கிடைக்கும்.
எஸ்பிஐ சிஷு முத்ரா கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க, ஆதார் அட்டை, பான் கார்டு, வசிப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், கிரெடிட் கார்டு அறிக்கை, வணிகச் சான்றிதழ், செல்போன் எண், வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.
இதையும் படிங்க:
இனி முன்பதிவு பெட்டிகளில் உரிய அனுமதியின்றி பயணம் செய்தால் உடனடி அபராதம்… ரயில்வே நிர்வாகம் அதிரடி!
இந்த ஆவணங்களுடன் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைக்குச் சென்று, வங்கி ஊழியரிடம் அதற்கான ஆவணத்தை பெற வேண்டும். அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்பி, ஆவணங்களின் நகல்களை இணைத்து, வங்கி அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் தகவல்கள் உடனடியாக சரிபார்க்கப்பட்டு, உங்கள் கணக்கில் கடன் தொகை உடனடியாக டெபாசிட் செய்யப்படும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)