பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான பசவராஜ் பொம்மை, ஷிகாவ்ன் சட்டப்பேரவைத் தொகுதியின் பேரவை உறுப்பினர் பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஹாவேரி தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவரது மாநில பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
பொம்மை தனது முதல் மக்களவைத் தேர்தலில், தனது எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ வேட்பாளரை விட 43,513 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பொம்மை 7,05,538 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்தசுவாமி கடாதேவர்மத் 6,62,025 வாக்குகளும் பெற்றனர்.

