20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாள அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்கா த்ரில் வெற்றி பெற்றது.
கிங்ஸ்டவுனில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாள அணி, தென்னாப்ரிக்காவை பேட் செய்ய பணித்தது. தென்னாப்ரிக்க அணியில் தொடக்க வீரர் ரீசா ஹென்ட்ரிக்ஸ் ஒருமுனையில் நிதானமாக விளையாட, மறுமனையில் விக்கெட்கள் சரிந்தன. ஹென்ட்ரிக்ஸ் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் தென்னாப்ரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. நேபாள அணியில் குசால் பர்டெல் 4 விக்கெட்களும், திபேந்திர சிங் 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.
116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நேபாள வீரர்கள், தென்னாப்ரிக்க அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.
ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் என நேபாள அணி வலுவான நிலையில் இருந்தது. எனினும் தென்னாப்ரிக்க வீரர்களின் அனுபவம்வாய்ந்த பந்துவீச்சால், கடைசி நேரத்தில் நேபாள அணி தடுமாறியது. கடைசி பந்தில் வெற்றி பெற 2 ரன்கள் தேவை என்ற நிலையில், குல்சன் ஜா ரன் அவுட்டானார். இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்க அணி திரில் வெற்றி பெற்றது.
இதையும் படிக்க:
சூப்பர் 8-ல் விளையாடும் இந்தியா உள்ளிட்ட அணிகள் எவை? அட்டவணை இதோ
20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு ரன் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்க அணி வெற்றி பெறுவது இது ஐந்தாவது முறையாகும்.
டி பிரிவில் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள தென்னாப்ரிக்க அணி மட்டுமே இதுவரை சூப்பர் எயிட் சுற்றை உறுதி செய்துள்ளது. நேபாள அணி 3 போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்த நிலையில், மற்றொரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்து.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)