• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மணக்க மணக்க மலர்கள் விற்பனை… தென் தமிழகத்தில் முக்கியமான திண்டுக்கல் பூ மார்க்கெட்…

GenevaTimes by GenevaTimes
June 15, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
மணக்க மணக்க மலர்கள் விற்பனை… தென் தமிழகத்தில் முக்கியமான திண்டுக்கல் பூ மார்க்கெட்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் மார்க்கெட் தமிழகத்தில் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு அடுத்து முக்கியமான மார்க்கெட்டாக விளங்குகிறது.

இங்கு திண்டுக்கல் பகுதி மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகிறது. அதேபோல் இங்கிருந்தும் வெளி மாவட்டங்களுக்குக் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுவதால் பிற மாவட்ட மக்களும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டை நன்கு அறிந்திருப்பர்.

ஆனால் திண்டுக்கல் நகர் பகுதியில் பூக்கள் விற்பனைக்கென தனியாக பூ மார்க்கெட்டும் இயங்கி வருவது என்பது வெளி மாவட்ட மக்கள் பெரிதும் அறிந்திராத ஒன்றாகத்தான் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் மட்டுமல்லாமல் பூக்களும் அதிகளவில் பயிரிடப்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிங்க: இந்த 2 நாட்களுக்கு லீவ்… மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளுக்குப் பறந்த அதிரடி உத்தரவு…

திண்டுக்கல் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களான வெள்ளோடு, வடமதுரை, அய்யலூர், ஒட்டன்சத்திரம், ஆவாரம் பட்டி, மலைகேணி, கொடைரோடு போன்ற பல கிராமங்களில் பூக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. மல்லி, முல்லை, துளசி, கனகாம்பரம், அரளி, கோழிக்கொண்டை, இருவாட்சி, ஜாதிமல்லி போன்ற பூக்கள் இப்பகுதியில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூவானது திண்டுக்கல் மையப்பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா பூ மார்கெட்டிற்க்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. முன்பு தனியார் வசம் செயல்பட்டு வந்த இந்த பூமார்க்கெட் 1993ஆம் ஆண்டு முதல் நகராட்சியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு தற்போது மாநகராட்சியால் நிர்வகிக்கப்படுகிறது.

விளம்பரம்

சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து இந்த பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படும் பூக்கள் இங்கிருந்து கேரளாவின் திருவந்தனந்தபுரம், பாலக்காடு பகுதிகளுக்கும், தமிழ்நாட்டில் மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி போன்ற பல இடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலத்தை மேம்படுத்த மானியம்… விவசாயிகள் பயன்பெற அழைப்பு…

இது குறித்து திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் கடை நிர்வகிக்கும் சித்தர் என்பவர் கூறுகையில், “திண்டுக்கல் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மல்லி, முல்லை, செவ்வந்தி, கனகாம்பரம், அரளி, கோழிக்கொண்டை போன்ற பல வகையான பூக்கள் இந்த மார்கெட்டிற்க்கு வருகின்றன.

விளம்பரம்

அதேபோல் பொக்கே செய்வதற்கான பூக்கள் எல்லாம் ஓசூர், ஊட்டி போன்ற இடங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. கேரளா மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு இங்கிருந்து பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அன்றைய நாளில் பூக்களின் வரத்தைப் பொருத்து விலையில் ஏற்றம் இறக்கம் காணப்படும். மேலும், முகூர்த்த நாட்களிலும், பண்டிகைக்காலத்திலும் பூக்களின் விலை அதிகமாகவே காணப்படும்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

.

Read More

Previous Post

T20 World Cup: நேபாளத்தை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா; இருந்தாலும் நேபாள பந்து வீச்சாளர்கள் மாஸ்-t20 world cup and south africa beat nepal by one run

Next Post

மேடையிலேயே டோஸ் விட்ட அமித் ஷா? அமைதியாக திரும்பிய தமிழிசை! அடுத்து ஸ்கெட்ச் அண்ணாமலைக்கா? பரபர பாஜக | Makkal Osai

Next Post
மேடையிலேயே டோஸ் விட்ட அமித் ஷா? அமைதியாக திரும்பிய தமிழிசை! அடுத்து ஸ்கெட்ச் அண்ணாமலைக்கா? பரபர பாஜக | Makkal Osai

மேடையிலேயே டோஸ் விட்ட அமித் ஷா? அமைதியாக திரும்பிய தமிழிசை! அடுத்து ஸ்கெட்ச் அண்ணாமலைக்கா? பரபர பாஜக | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin