போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மைதானத்திற்குள் நுழைந்து தோனியின் காலில், ரசிகர் ஒருவர் விழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் போது சென்னை அணி 232 ரன்களை சேசிங் செய்தது. கடைசி ஓவரை குஜராத் அணியின் ராஷித் கான் வீச, அதனை தோனி எதிர்கொண்டார்.
அப்போது 19.3 ஓவர்களில் சென்னை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்திருந்தது. இன்னும் வெற்றி பெற இன்னும் 3 பந்துகளில் சென்னை 40 ரன்கள் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் மைதானத்திற்குள் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ரசிகர் ஒருவர் தலையில் சென்னை அணியின் பேண்டை கட்டிக்கொண்டு பாதுகாப்பு வளையங்களை தாண்டி மைதானத்திற்குள் நுழைந்தார்.
அவரை பார்த்ததும் தோனி லேசாக ஜாக்கிங் செய்து பின்னே ஓடினார். இருப்பினும் தோனியை அடைந்த அந்த நபர், அவரது காலில் விழுந்தார். பின்னர் அந்த ரசிகரை அரவணைத்துக் கொண்ட தோனி, அங்கு குவிந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் பேசி ரசிகருக்கு பாதிப்பு ஏற்படாமல் அவரை வெளியேற்றுங்கள் என்று கூறினார்.
The Fan touched the feet & then hugged Dhoni – then Mahi saying something to him (maybe to avoid entering the pitch) later trying to protect the fan from the guard. ⭐ pic.twitter.com/OYEGyLa9r4
— Johns. (@CricCrazyJohns) May 11, 2024
இந்த சம்பவம் அகமதாபாத் மைதானத்தில் கூடியிருந்த சுமார் 1 லட்சம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் தோனியின் செயலை பாராட்டி உற்சாக குரல் எழுப்பினர். தற்போது இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நேற்று நடந்த குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
.
&w=750&resize=750,375&ssl=1)
