செல்போன் எண்களை வைத்திருப்பதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான செய்தியை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைக் குழுமமான டிராய் மறுத்துள்ளது.
இந்தியாவில் 120 கோடிக்கும் அதிகமான மொபைல்போன் இணைப்புகள் உள்ளன. இவற்றை முறைப்படுத்த பல்வேறு நெறிமுறைகளை டிராய் வகுத்து வருகிறது. இந்நிலையில் செல்போனில் இரு சிம்கார்டுகளை வைத்திருப்போர் அவற்றில் ஏதேனும் ஒன்றை மிகக் குறைந்த அளவில் மட்டும் பயன்படுத்துவதுவர். அதுபோல் சில நிறுவனங்கள், சில தொலைபேசி இணைப்புகளை அதிகம் பயன்படுத்தாமல் வைத்திருப்பார்கள்.
இதையும் படிக்க:
ஒரே செல்போன் நம்பரை பல ஆண்டுகளாக வைத்திருந்தால் தனி கட்டணம்? உண்மை என்ன?
அதுபோன்ற செல்போன் எண்கள் மற்றும் தொலைபேசி எண்களுக்குத் தனியாக கட்டணம் வசூலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு சமூக வலைதளங்களில் மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
The speculation that TRAI intends to impose charges on customers for holding multiple SIMs/ numbering resources is unequivocally false. Such claims are unfounded and serve only to mislead the public.
— TRAI (@TRAI) June 14, 2024
இந்நிலையில் அந்த செய்தியை டிராய் மறுத்துள்ளது. ஒரு செல்போன் எண் அல்லது இரு சிம்கார்டுகளை வைத்திருப்பதற்கோ அல்லது தொலைபேசி எண்களை வைத்திருப்பதற்கோ பிரத்யேகக் கட்டணம் வசூலிக்கும் எண்ணம் இல்லை என விளக்கம் அளித்துள்ளது. டிராயின் இந்த அறிவிப்பால் செல்போன் பயனாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
