வரும் ஜூன் 17-ஆம் தேதி ஹஜ்ஜீப் பெருநாள் தினம். நீண்ட வார இறுதியை முன்னிட்டு இரண்டு நிலச் சோதனைச்சாவடிகளிலும் போக்குவரத்து நெரிசல் தொடரும் என குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது.
கடந்த ஜூன் 13-ஆம் தேதி உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளை சுமார் 510,000 க்கும் மேற்பட்டோர் கடந்து சென்றதாக ஆணையம் தெரிவித்துள்ளது.அந்த விவரங்களை அதன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

