• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி உலகின் ஒட்டுமொத்த ஜனநாயகத்தின் வெற்றி

GenevaTimes by GenevaTimes
June 15, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி உலகின் ஒட்டுமொத்த ஜனநாயகத்தின் வெற்றி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் பதற்றங்களின் சுமைகளை தெற்கு நாடுகளே அதிகம் சுமப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

50-வது ஜி7 உச்சிமாநாட்டு இத்தாலியின் அபுலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் உறுப்பு நாடுகளாக கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

மாநாட்டின் இடையே, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு இம்மானுவேல் மேக்ரான் வாழ்த்து தெரிவித்தார்.

விளம்பரம்

ஹொரைசன் 2047 செயல்திட்டம் மற்றும் இந்தோ-பசிபிக் செயல்திட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்தியா – பிரான்ஸ் இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி, கல்வி, பருவநிலை மாற்றம் தொடர்பாகவும் இருவரும் ஆலோசித்தனர்.

இதையும் படிக்க:
86% இந்திய பணியாளர்கள் வேலையில் போராடுகிறார்கள் – Gallup 2024 ஆய்வில் தகவல்!

அடுத்த ஆண்டு பிரான்சில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு மற்றும் ஐநா பெருங்கடல் மாநாடுகளை இருநாடுகளும் இணைந்து நடத்த மேக்ரானும் மோடியும் ஒப்புக் கொண்டனர்.

விளம்பரம்

தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்-கை பிரதமர் மோடி, சந்தித்து பேசினார். செமி கண்டக்டர்கள், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் போன்ற துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்ததாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மாநாட்டில் சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி, உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் பதட்டங்களின் சுமைகளை தெற்கு நாடுகளே அதிகம் சுமப்பதாக கூறினார். செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய வியூகத்தை வகுத்த சில நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும் கூறினார்.

இதையும் படிக்க:
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகனுக்கு 25 ஆண்டுகள் சிறை- நீதிமன்றம் அதிரடி

விளம்பரம்

இந்திய மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தந்த வரலாற்றுத் தேர்தல் வெற்றி எனும் ஆசி, ஜனநாயகத்தின் வெற்றி என்றும், இது உலகின் ஒட்டுமொத்த ஜனநாயகத்தின் வெற்றி என்றும் பெருமிதத்துடன் கூறினார்.

இதனிடையே, ரஷ்யாவுக்கு ஆயுத உதிரிபாகங்களை அனுப்புவதை சீனா நிறுத்த வேண்டும் என்று ஜி7 வரைவு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், முடக்கி வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் சொத்துக்களிலிருந்து வரும் வட்டி வருமானத்தில் 41 லட்சம் கோடி ரூபாயை உக்ரைனுக்கு நிதியாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்பு தெரிவித்துள்ளார். அதே நேரம், இதனை திருட்டு என வர்ணித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், இதற்கு தக்க தண்டனை அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்

விளம்பரம்

ஜி7 மாநாட்டிற்கு முதல் முறையாக வருகை தந்த போப் பிரான்சிசை பிரதமர் மோடி ஆரத் தழுவி வரவேற்றார். இந்தியாவுக்கு வரும்படியும் அழைப்பு விடுத்தார்.

தங்கத் தாமரை மகளே…


தங்கத் தாமரை மகளே…

மாநாட்டில் பேசிய போப் பிரான்சிஸ், செயற்கை நுண்ணறிவுக்கு பதிலாக மனித வளத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். சக்திவாய்ந்த தொழில்நுட்பங்கள் மனித வளத்தை வெறும் வழிமுறைகளாக மாற்றும் அபாயம் உள்ளதாகவும் கூறினார்.

மாநாட்டின் ஒரு பகுதியாக, ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்சுக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது, ஜி7 தலைவர்கள் அனைவரும் ஜெர்மன் அதிபருக்கு ஹேப்பி பர்த்டே பாடி வாழ்த்து தெரிவித்தனர்.

விளம்பரம்

.

Read More

Previous Post

ஒன்றுக்கு மேற்பட்ட சிம் கார்டுக்கு கட்டணமா? – மறுப்பு தெரிவித்தது டிராய் | Is it fee for more than one SIM card trai denied

Next Post

டிங்கி தடுப்பூசியின் விலை 500 ரிங்கிட்? | Makkal Osai

Next Post
டிங்கி தடுப்பூசியின் விலை 500 ரிங்கிட்? | Makkal Osai

டிங்கி தடுப்பூசியின் விலை 500 ரிங்கிட்? | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin