கதிர்காமம் உற்சவத்தை முன்னிட்டு அப்பிரதேசத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் 06ஆம் திகதி முதல் ஜூலை 22ஆம் திகதி வரை கதிர்காமம் உற்சவம் ஆரம்பமாகவுள்ளது. இதன் காரணமாக அப்பிரதேசத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உரிமம் பெற்ற அனைத்து மதுபானசாலைகளையும் இக்காலப்பகுதிக்குள் மூடுமாறு மதுவரி ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
The post ஜூலை 06 முதல் 22 வரை கதிர்காமம் உற்சவம் appeared first on Thinakaran.

